செய்திகள் :

வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்ததால் இளைஞர்கள் பற்றி மோடிக்கு கவலையில்லை! ராகுல்

post image

தில்லியில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை கூடிய 15,000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள், பணியாளர் தேர்வு ஆணையத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

தேர்வு நேரத்தில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள், தவறான கேள்விகள் மற்றும் தொலைதூர தேர்வு மையங்கள் உள்ளிட்டவைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.

இதனிடையே காவல்துறையினர் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து மாலையிலும் போராட்டம் தொடர்ந்தது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்து இரவும் போராட்டத்தை தொடர்ந்ததால், காவல்துறையினர் வலுகட்டாயமாக அப்புறவுப்படுத்த முயன்றனர்.

இதில், மாணவர்களுடன் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, தடியடி நடத்திய காவல்துறையினர் 40 பேரை கைது செய்துள்ளனர்.

ராகுல் கண்டனம்

இந்த நிலையில், மாணவர்கள் மீது தடியடி நடத்தியதற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“ராம்லீலா மைதானத்தில் அமைதியாகப் போராடிய எஸ்எஸ்சி தேர்வர்கள் மற்றும் ஆசியர்கள் மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தடியடி, வெட்கக்கேடானது மட்டுமல்ல, கோழைத்தனமான அரசாங்கத்தின் அடையாளமாகும்.

இளைஞர்கள் தங்கள் உரிமைகளான வேலைவாய்ப்பு மற்றும் நீதியை மட்டுமே கோரினர். ஆனால், அவர்களுக்கு லத்திகள்தான் கிடைத்தது.

மோடி அரசுக்கு நாட்டின் இளைஞர்களைப் பற்றியோ அல்லது அவர்களின் எதிர்காலத்தைப் பற்றியோ கவலையில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த அரசு மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வரவில்லை, வாக்குகளைத் திருடி ஆட்சிக்கு வந்தது.

முதலில், அவர்கள் வாக்குகளைத் திருடினார்கள். பின்னர், தேர்வுகள், வேலைகளைத் திருடுகிறார்கள். தொடர்ந்து, உங்கள் உரிமைகளையும் குரலையும் நசுக்குகிறார்கள்.

அவர்களுக்கு இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்கு தேவையில்லை, எனவே உங்கள் கோரிக்கைகளுக்கு ஒருபோதும் அவர்கள் முன்னுரிமை அளிக்க மாட்டார்கள்.

தற்போது போராடுவதற்கான நேரம் வந்துவிட்டது. பயப்படாமல் உறுதியாக நின்று போராடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தசரா விழாவுக்கு புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு: பாஜக கண்டனம்!

உலகப் புகழ் பெற்ற மைசூரு சாமுண்டீஸ்வரி திருக்கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் தசரா விழாவில் புக்கர் பரிசு வென்ற முஸ்லிம் எழுத்தாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கர்நாடக பாஜக தரப்பிலிரு... மேலும் பார்க்க

காஷ்மீர்: எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் - தீவிர தேடுதல் பணி!

ஜம்மு - காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாட்டம் எதிரொலியாக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.ஜம்மு - காஷ்மீரில் உரி பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமா... மேலும் பார்க்க

பஞ்சாபில் இலவச ரேஷனை நிறுத்த மத்திய அரசு சதி: பகவந்த் மான்

பாஜக தலைமையிலான மத்திய அரசு மாநிலத்தில் 55 லட்ச மக்களுக்கு இலவச ரேஷனை நிறுத்தச் சதி செய்வதாக பஞ்சாப் முதல்வர் பகந்த் மான் குற்றம் சாட்டினார். பஞ்சாப் மக்களுக்கு எழுதிய எழுத்துப்பூர்வ செய்தியில், மாநில... மேலும் பார்க்க

நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றார் அஜய் குமார்!

மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா நாகாலாந்தின் 22வது ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் இல. கணேசனின் மறைவைத் தொடர்ந்து, அஜய் குமார் பல்லாவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு குவாஹ... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் தொடரும் கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!

ராஜஸ்தானில் பல பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை முதல் மிக கனமழை தொடர வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெய்ப்பூர் உள்ட பிற மாவட்டங்களில் பள்ளிகள் மூடப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.... மேலும் பார்க்க

நடிகை, எழுத்தாளருக்கு பாலியல் தொல்லை! கேரள காங்கிரஸ் எம்எல்ஏ இடைநீக்கம்!

பாலியல் புகார்களைத் தொடர்ந்து கேரள காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ராகுல் மம்கூத்ததில் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.பெரிய அரசியல் கட்சியைச் சேர்ந்த இளைஞர் அமைப்பின் மாநிலத் தலைவர் ... மேலும் பார்க்க