டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக நிறைவு!
மும்பை: வலுவான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலை மீட்சியை தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 6 காசுகள் சரிந்து ரூ.87.58 ஆக முடிவடைந்தது.
ஆகஸ்ட் 27 கட்டண காலக்கெடுவை அமல்படுத்துவதற்கும், செப்டம்பர் 17 அன்று பெடரல் ரிசர்வ் கூட்டத்திற்கு முன்னதாக வரவிருக்கும் அமெரிக்க பொருளாதாரத் தரவுகளுக்கும் முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருப்பதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.38 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.87.34 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.87.61 ஐ தொட்ட நிலையில், முடிவில் 6 காசுகள் சரிந்து ரூ.87.58ஆக முடிந்தது.
உள்நாட்டு அலகு அதன் முந்தைய முடிவை விட 6 பைசா சரிவைப் பதிவு செய்து 87.58 இல் நாள் நிறைவடைந்தது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ.87.52 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!