தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: சுவரை உடைத்து தொழிலாளர்களை மீட்ட தீயணைப்புப் ...
உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!
உத்தரகண்ட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யமுனோத்ரி, கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.
நலூனா பகுதியருகே ஏற்பட்ட நிலச்சரிவால் உத்தர்காசி கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. நிலசரிவுகள் ஆங்காங்கே தொடர்ந்து ஏற்படுவதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, யமுனோத்ரி நெடுஞ்சாலையில் பனாஸ் அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் வாகனப் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.
தலைநகர் டேராடூன் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.