செய்திகள் :

அனைத்தையும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது பாஜக: அகிலேஷ் யாதவ்

post image

அனைத்து விஷயங்களிலும் பாரதிய ஜனதா கட்சி சொந்தம் கொண்டாட நினைப்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.

முதன்முதலில் விண்வெளிக்குச் சென்றவர் அனுமன் என முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக எம்.பி.யுமான அனுராக் தாக்குர் பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக அகிலேஷ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேசிய விண்வெளி நாளையொட்டி, ஹிமாசலப் பிரதேசம் உனாவில் உள்ள பிஎம் ஸ்ரீ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அனுராக் தாக்குர், விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர் யார் என்ற கேள்வியைக் கேட்டார். பின்னர் மாணவர்களின் பல்வேறு பதில்களைக் கேட்ட பின்னர், அனுமன்தான் விண்வெளிக்குச் சென்ற முதல் வீரராக இருக்கலாம் எனக் கூறினார்.

இது தொடர்பாக லக்னெளவில் செய்தியாளர்களுடன் பேசிய அகிலேஷ் யாதவ், ''சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ள சுபான்ஷு சுக்லாவுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த சாதனையை அவர் செய்துள்ளார். இத்தனை ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்பு மற்றும் கடுமையான பயிற்சியின் மூலம் சுபான்ஷு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்திய நாட்டுக்கு இது மிகப்பெரிய பெருமை. தனிப்பட்ட முறையில் அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் இது பெருமையான தருணம். அவரால் நாடும் பெருமை அடைகிறது. அவர் நாட்டின் சொத்தாக மாறியுள்ளார்'' எனக் குறிப்பிட்டார்.

மேலும், அனுராக் தாக்குரின் பெயரைக் குறிப்பிடாமல் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து அவர் பேசியதாவது, ''பாஜக அனைத்து விஷயங்களிலும் சொந்தம் கொண்டாட நினைக்கிறது. இப்போது, விண்வெளிக்குச் சென்ற முதல் வீரர் அனுமன் என சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், நாம் என்றுமே கூறுவது என்னவென்றால், நம் தெய்வங்கள் அனைத்தும் வானத்தில் இருக்கின்றன என்பதுதான்'' என அகிலேஷ் தெரிவித்தார்.

இதையும் படிக்க | பஞ்சாபில் இலவச ரேஷனை நிறுத்த மத்திய அரசு சதி: பகவந்த் மான்

BJP tries to take credit for everything": Akhilesh Yadav slams Anurag Thakur's 'Hanuman first to visit space' remarks

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிப்பு! இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்...

டைனோசார் கால புதைபடிமம் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிறப்பம்சம் என்னவென்றால், இங்கிலாந்துக்குப் பின் இந்தியாவில்தான், இத்தகைய பழங்கால புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியா... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: சுவரை உடைத்து தொழிலாளர்களை மீட்ட தீயணைப்புப் படை!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திங்கள்கிழமை(ஆக. 25) மாலை 5.15 மணியளவில் அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதல் பதற்றமான சூழல் அங்கு நிலவுகிறது. ஆலை உள்ளே தொழிலாளர்கள் பலர்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும்: மனிதாபிமான அடிப்படையில் முன்கூட்டியே எச்சரித்த இந்தியா!

பாகிஸ்தானில் பெருவெள்ளம் ஏற்படும் என்று முன்கூட்டியே இந்தியா தரப்பிலிருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் தவீ ஆற்றில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அந்நாட்டுக்கு தூதரக ரீதியாக இ... மேலும் பார்க்க

குஜராத்தில் பிரதமர் மோடி சாலைவலம்: ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு!

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஆக. 25) மாலை சாலைவலம் சென்றார். அப்போது வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பளித்தனர்.நலத்திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக அகமதாபாத் நகருக்குச் சென்றுள... மேலும் பார்க்க

மோடியின் பட்டப்படிப்பு விவகாரம்: உத்தரவை ரத்து செய்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை வெளியிட வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழகத்துக்கு, மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.தில்லி பல்கலைக்கழகத... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் ஃபிஜி பிரதமர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஃபிஜி நாட்டின் பிரதமர் சித்திவேணி லிகாமமதா ரபூகா இன்று(ஆக. 25) சந்தித்து பேசினார். தில்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் (ராஷ்திரபதி பவன்) இந்தச் சந்திப்பு நடைப... மேலும் பார்க்க