செய்திகள் :

48 நாள்களில் காரியத் தடைகளைத் தகர்த்து உங்கள் கனவுகளை நிஜமாக்கும் ஸ்ரீசுதர்சன ஹோமம்! சங்கல்பியுங்கள்

post image

தடைகளைத் தகர்த்து உங்கள் கனவுகளை நிஜமாக்கும் ஸ்ரீசுதர்சன ஹோமம்! சங்கல்பியுங்கள். 2025 செப்டம்பர் 17 புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயத்தில் ஸ்ரீசுதர்சன மகாஹோமம் நடைபெற உள்ளது.

சுதர்சன ஹோமம்

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

சுதர்சனரின் மூல மந்திரத்தை 12 லட்சம் தடவை உச்சரித்த பலனைத் தருவது ஸ்ரீசுதர்சன ஹோமம் என்கிறார்கள் ஆன்றோர்கள். இந்த ஹோமத்தில் கலந்து கொள்பவர்களின் வீட்டில் எந்தவித கவலையோ அச்சமோ இருக்காது என்பது நம்பிக்கை.

திருமாலின் உற்ற துணையாகவும் தீமைகளை அழிக்கும் துடியான தேவராகவும் விளங்கும் சுதர்சன பகவானை வணங்கினால் காரியத் தடைகள் நீங்கும். நீங்காத நோயும் கடனும் நீங்கும். திருஷ்டி, எதிரிகள் தொல்லைகள் நீங்கும் என்பது இந்த ஹோமத்தின் முக்கிய பலன்களாகும்.

சங்கு, சக்கரம், வாள், அம்பு, வில், மழு, அங்குசம், கேடயம், கலப்பை, சூலம், கயிறு, உலக்கை, அக்னி, கவசம், கதை, திரிவாள் என 16 ஆயுதங்கள் கொண்டவரும், முக்கண்ணும் தங்க நிற சரீரம் கொண்டவருமான ஸ்ரீசுதர்சனரை பிரார்த்திக்கும் கணத்திலேயே வந்து அருள்பவர் என்கின்றன புராணங்கள். இவரை ஹோமத்தால் ஆராதித்தால் வேண்டிய பலன்கள் கிடைக்கும்; அமைதியும் நிம்மதியும் சேரும். பாவங்களும் தோஷங்களும் நீங்கும். சுபிட்சமும் வளமும் தரும் சுதர்சன ஹோமத்தைச் செய்தால் ஒருவர் வாழ்வு மேம்படும்.

சுதர்சன ஹோமம்

சிறப்பு மிக்க ஸ்ரீசுதர்சன ஹோமம் வரும் 2025 செப்டம்பர் 17 புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் வத்தலகுண்டு ஸ்ரீசுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனத்தில் நடைபெற உள்ளது. காரியத் தடைகளைத் தகர்த்து உங்கள் எதிர்காலக் கனவுகளை நிஜமாக்கும் இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு 48 நாள்களில் தீர்வு பெறுங்கள்!

சிறப்பான இந்த சுதர்சன ஹோமம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் அமைந்துள்ள சுந்தர மந்திராலயத்தில் நடைபெற உள்ளது. ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் அரூபமாக அருளும் புண்ணிய க்ஷேத்திரம் இந்த சுந்தர மந்திராலயம் ஸ்ரீஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் ம்ருத்திகா பிருந்தாவனம். 1974-ம் ஆண்டு மந்திராலயம் சென்ற ராகவேந்திர தாசர் ஸ்ரீமான் T.N.சுந்தரராஜ ராவ் அவர்களுக்கு மந்திராலய பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ கஜயீந்திர சுவாமிகளால் வழங்கப்பட்ட ஸ்ரீராகவேந்திரர் ம்ரித்திகை இங்கு மூல மூர்த்தமாக எழுந்தருளி உள்ளது. ம்ரித்திகை ரூப வடிவில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் இங்கு சூட்சும வடிவிலும் பக்தர்களைக் காத்து வருகிறார். ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் இங்கே சாளக்கிராம வடிவில் எழுந்தருளி உள்ளார். இவருக்கும் தினசரி அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதனால் இது கல்வி, கலைகள், மனோவியாதிகள் தீர்க்கும் தலமாகவும் விளங்குகிறது.

மந்திராலயம் சென்று தரிசிக்க முடியாதவர்கள் வத்தலகுண்டு சுந்தர மந்திராலயம் வந்து தரிசிப்பது உண்டு. இங்கு ஸ்ரீராகவேந்திரர் நடத்திய அற்புதங்களும் லீலைகளும் ஏராளம் என்கிறார்கள் இங்குள்ள பக்தர்கள்.

சுதர்சன ஹோமம்

ஸ்ரீராகவேந்திரரின் பக்தரான T.N.சுந்தரராஜ ராவ் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டு உருவான இந்த பிருந்தாவனத்துக்கு வந்தவர்கள் பெற்ற பலன்கள் அநேகம். அவரது வழியையொட்டி தற்போது அவரது குமாரர் B.S. கோபிநாதன் அவர்களின் இந்த பிருந்தாவனத்தை நிர்வகித்து வருகிறார். லோகத்தின் க்ஷேமத்துக்காகவே இங்கு அன்றாடம் பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. சாந்நித்யம் மிக்க இந்த பிருந்தாவனத்தில் சக்தி விகடன் வாசகர்களின் நலனுக்காக இந்த சுதர்ஸன ஹோமம் நடைபெற உள்ளது. கலந்து கொண்டு பலன் பெறுங்கள்!

QR CODE FOR SUDHARSANA HOMAM

QR CODE FOR SUDHARSANA HOMAM

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு சிறப்பு ரட்சை , அட்சதை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம். https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 - 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்கம்; காணிக்கை அளித்த பக்தர் குறித்து ஆந்திர முதல்வர் சொல்வது என்ன?

ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்குத் திருப்பதி ஏழுமலையான் பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கம் காணிக்கையாகச் செலுத்தவிருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.மங்களகிரியில் 'வறுமை ஒழிப... மேலும் பார்க்க

`குறும்புக் கண்ணன், அழகு ராதே' - கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் | Photo Album

கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந... மேலும் பார்க்க

நலமருளும் நாகவள்ளி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை: ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் வழிபாடு!

2025 ஆகஸ்ட் 29-ம் தேதி மண்ணிவாக்கம் மதனபுரம் ஏரிக்கரை ஸ்ரீநாகவள்ளி அம்மன் மற்றும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஜம்புகேஸ்வரர் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் விளக்கு பூஜை நடைபெற இருக... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: ஈரோட்டில் விற்பனைக்குத் தயாரான வண்ண, வண்ண பிள்ளையார் சிலைகள் | Photo Album

விநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தய... மேலும் பார்க்க

``ஜன கல்யாண் மூலம் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டார்'' - ஸ்ரீஜெயேந்திரர் குறித்து ஹரிஹர முத்தையர்

"அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்" என்று அவரின் ஜெயந்தி விழாவில் ஹரிஹர முத்தையர் நெகிழ்ச்சியோடு பேசினார்.காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி முக்தி அடைந்த காஞ்... மேலும் பார்க்க