செய்திகள் :

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோ தங்கம்; காணிக்கை அளித்த பக்தர் குறித்து ஆந்திர முதல்வர் சொல்வது என்ன?

post image

ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்துக்குத் திருப்பதி ஏழுமலையான் பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கம் காணிக்கையாகச் செலுத்தவிருப்பதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

மங்களகிரியில் 'வறுமை ஒழிப்பு' திட்டம் P4 இல் உரையாற்றிய நாயுடு, "அந்தப் பக்தர் தெய்வத்துக்குத் திருப்பிக்கொடுக்க முடிவு செய்தார்" எனக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு கூறியதன்படி, பெயர் குறிப்பிடாத அந்தப் பக்தர் தனது நம்பிக்கையின்பால் திருப்பதி ஏழுமலையான் சுவாமியை வணங்கி ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

தற்போது நிறுவனத்தின் 60% பங்குகளை விற்று, சுமார் 6000-7000 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். கடவுளுக்கு நன்றி உணர்வைக் காட்டும் வகையில் தற்போது காணிக்கை அளிக்கவுள்ளார்.

இதுகுறித்துப் பேசும்போது, "திருப்பதி ஏழுமலையான்தான் அவருக்கு அந்தச் செல்வத்தை அளித்துள்ளார்" என்றும் குறிப்பிட்டுள்ளார் சந்திரபாபு.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)
திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)

மேலும், திருப்பதி ஏழுமலையான் திரு உருவச்சிலை தினமும் 120 கிலோ ஆபரணங்களால் அலங்கரிக்கப்படும் என்றும், அதை அறிந்த பக்தர் 121 கிலோ தங்கம் அளிக்க முன்வந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்தத் தங்கத்தின் மதிப்பு 140 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

`குறும்புக் கண்ணன், அழகு ராதே' - கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் | Photo Album

கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந்தி கொண்டாட்டம் கிருஷ்ணஜெயந... மேலும் பார்க்க

நலமருளும் நாகவள்ளி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை: ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் வழிபாடு!

2025 ஆகஸ்ட் 29-ம் தேதி மண்ணிவாக்கம் மதனபுரம் ஏரிக்கரை ஸ்ரீநாகவள்ளி அம்மன் மற்றும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஜம்புகேஸ்வரர் கோயிலில் மாலை 6 மணி அளவில் சக்தி விகடன் வழங்கும் விளக்கு பூஜை நடைபெற இருக... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: ஈரோட்டில் விற்பனைக்குத் தயாரான வண்ண, வண்ண பிள்ளையார் சிலைகள் | Photo Album

விநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தயாரிப்புவிநாயகர் சிலை தய... மேலும் பார்க்க

``ஜன கல்யாண் மூலம் அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்டார்'' - ஸ்ரீஜெயேந்திரர் குறித்து ஹரிஹர முத்தையர்

"அடித்தட்டு மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள்" என்று அவரின் ஜெயந்தி விழாவில் ஹரிஹர முத்தையர் நெகிழ்ச்சியோடு பேசினார்.காஞ்சி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி முக்தி அடைந்த காஞ்... மேலும் பார்க்க

நெருங்கும் விநாயகர் சதுர்த்தி விழா: ஈரோடு மாவட்டத்தில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள்!

ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள்ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள்ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள்ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயகர் சிலைகள்ஈரோடு தயார் செயப்படுகின்ற விநாயக... மேலும் பார்க்க

பிரம்மஹத்தி பரிகார ஹோமத்தில் கலந்து கொண்டால் கிடைக்கும் 7 அற்புத பலன்கள்..!

2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. சகல கஷ்டங்களையும் நீக்கும் இந்த அபிவிருத்தி ஹோமத்தில் கலந்து... மேலும் பார்க்க