மும்பை மோனோரயில் விபத்து: ரயிலில் இருந்த 400-க்கும் மேற்பட்ட பயணிகள் பத்திரமாக ம...
ரஷியாவில் ஜெய்சங்கர்! இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை
ரஷியாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவின் அழைப்பை ஏற்று, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அரசு முறைப் பயணமாக அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், வரும் ஆக.21 ஆம் தேதி வரையிலான இந்த மூன்று நாள் பயணத்தில், ரஷியா மற்றும் இந்தியா இடையிலான கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த பயணத்தில், அமைச்சர் ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவை நேரில் சந்தித்து பேசவுள்ளார். வரும் ஆக.20 ஆம் தேதி, மாஸ்கோவில் நடைபெறும், இந்தியா - ரஷியா அரசுகளுக்கு இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆணையத்தின் 26-வது அமர்வில் எஸ். ஜெய்சங்கர் கலந்துக்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷியாவுடன் இந்தியா மேற்கொள்ளும் எண்ணெய் வர்த்தகத்தினால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்துள்ள நிலையில், இந்தப் பயணத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.