செய்திகள் :

கர்நாடகாவில் தங்கம் மற்றும் செம்பு ஆய்வு உரிமத்தை வென்ற சிங்கரேணி!

post image

ஹைதராபாத்: மத்திய சுரங்க அமைச்சகத்தால் நடத்தப்பட்டும் ஏலத்தின் மூலம் கர்நாடகாவில் தங்கம் மற்றும் செம்புக்கான ஆய்வு உரிமத்தைப் வென்றுள்ளதாக அரசுக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்க நிறுவனமான சிங்கரேணி நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் ஏலத்தில் 37.75 சதவிகித ராயல்டியை மேற்கோள் காட்டி சிங்கரேணி L-1 ஏலதாரராக உருவெடுத்ததாக நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பால்ராம் தெரிவித்தார்.

தங்கம் மற்றும் செம்பு வைப்புக்கள் அமைந்துள்ள கர்நாடகாவின் தேவதுர்கா பகுதியில் சிங்கரேணி ஆய்வுப் பிரிவு விரைவில் ஆராய்ச்சியைத் தொடங்கும் என்றார்.

சுரங்க உரிமைகளைப் பெறும் நிறுவனம் - அது சிங்கரேணி அல்லது வேறு நிறுவனமாக இருந்தாலும், கர்நாடக அரசுக்கு ராயல்டி செலுத்த வேண்டும்.

ஆய்வுப் பணிக்கு சுமார் ரூ.90 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிற நிலையில், ரூ.20 கோடி மத்திய அரசால் மானியமாக வழங்கப்படும்.

இதையும் படிக்க: முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்ற ஜெம் அரோமாடிக்ஸ்!

முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்ற ஜெம் அரோமாடிக்ஸ்!

புதுதில்லி: சிறப்புப் பொருட்களை உற்பத்தி செய்யும் ஜெம் அரோமாடிக்ஸ் லிமிடெட், தனது பங்கு விற்பனையின் முதல் நாளில் சந்தாவை முழுவதுமாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.பங்குச் சந்தையிலிருந்து நிதி திரட்ட 97,... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவு!

மும்பை: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்த நம்பிக்கை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்களுக்குப் பிறகு இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 கா... மேலும் பார்க்க

காளையின் ஆதிக்கம்: தொடர்ந்து ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் காளைகள் தங்கள் பிடியை இறுக்கியதால், இந்திய பங்கு குறியீடுகள் தொடர்ந்து நான்காவது நாளாக லாபத்தில் முடிவடைந்தன. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை கொள்முதல் செய்ததும், அத... மேலும் பார்க்க

கீழே விழுந்தால் சேதமாகாது, அதிக பேட்டரி: அறிமுகமாகிறது ரெட்மி நோட் 15 பிளஸ்!

Redmi Note 15 Pro+ Display, Battery Specifications Confirmed Days Ahead of Launch in Chinaரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் இந்த வாரம் அறிமுகமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் வெளி... மேலும் பார்க்க

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

நேற்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றும்(ஆக. 19) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,319.11 என்ற புள்ளிகளில் தொடங்கிய ... மேலும் பார்க்க

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக.19), கிராமுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.வாரத்தின் துவக்க நாளான நேற்று விலையில் எந்த மாற்றமுமின்றி இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ... மேலும் பார்க்க