கர்நாடகாவில் தங்கம் மற்றும் செம்பு ஆய்வு உரிமத்தை வென்ற சிங்கரேணி!
நானும் ராதாகிருஷ்ணனும் இந்தியக் குடிமகன்கள்; தென் மாநிலத்தவர் என்பது பொருட்டல்ல! -சுதர்சன் ரெட்டி
நானும் சி. பி. ராதாகிருஷ்ணனும் இந்தியக் குடிமகன்கள்; தென் மாநிலத்தவர் என்பது பொருட்டல்ல என்று பி. சுதர்சன் ரெட்டி பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநராகப் பதவி வகித்துவரும் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர், நாளை(ஆக. 20) வேட்பு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிரணியில், எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி இன்று (ஆக. 19) தெரிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தென் மாநிலங்களிலிருந்து இரு வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இது குறித்த கேள்வியொன்றுக்கு இன்று (ஆக. 19) பதிலளித்துப் பேசிய பி. சுதர்சன் ரெட்டி செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“குடியரசு துணைத் தலைவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுப்பார்கள். அரசியல் கட்சிகளால் யார் வேட்பாளர் என்பதையே தெரிவு செய்ய முடியும்.
இந்தியாவில் ஒரே குடியுரிமைதான் உள்ளது. நானும் சி. பி. ராதாகிருஷ்ணனும் இந்தியக் குடிமகன்கள். தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என்பதெல்லாம் பொருட்டல்ல...” என்றார்.