செய்திகள் :

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பு..! ரசிகர்கள் வருத்தம்!

post image

ஆசிய கோப்பையில் தேர்வாகாமல் சென்ற ஷ்ரேயாஸ் ஐயருக்காக இந்திய ரசிகர்கள் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

அடுத்தாண்டு நடைபெறும் டி20 ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகிறது.

இந்திய அணி விவரம்

சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஷர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்ஷித் சிங் ராணா, ரிங்கு சிங்.

ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற கேப்டனாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஆச்சரியமாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருப்பதாக இந்திய ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

புறக்கணிக்கப்படுவது ஏன்?

கடந்த ஐபிஎல் தொடரிலும் பஞ்சாப் அணியை இறுதிப் போட்டிக்கு அவர் முன்னேற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2025-இல் 600க்கும் அதிகமான ரன்கள் குவித்த ஷ்ரேயாஸ் ஐயரின் சராசரி 50.33ஆக இருக்க, ஸ்டிரைக் ரேட் 175.07ஆக இருக்கிறது.

இந்த மாதிரியான ஒரு வீரரை எப்படி இந்திய அணி தேர்வு செய்யவில்லை. மீண்டும் மீண்டும் மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அநீதி இழைக்கப்படுகிறதென ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மொத்தமாக ஷ்ரேயாஸ் ஐயர் 240 டி20 போட்டிகளில் 6,578 ரன்கள் குவித்துள்ளார்.

ஆட்ட நாயகனான கேசவ் மகாராஜ்: 98 ரன்கள் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸி.க்கு சுற்றுப் பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்க அணி டி20 தொடரை 1-2 என இழந்தது.இந்நிலைய... மேலும் பார்க்க

2025 மகளிர் உலகக் கோப்பை: இந்திய அணி அறிவிப்பு!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025-க்கான இந்திய மகளிரணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் வரும் செப்.30 முதல் நவ.2ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இந்த உலகக் கோப்பை போட்டிக... மேலும் பார்க்க

கேசவ் மகாராஜா அசத்தல்: 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் ஆஸி.!

தெ.ஆ. உடனான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி 89 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்ற நிலையில், இன்று முதல் ஒருநாள் போட்டி தொட... மேலும் பார்க்க

ஆசிய கோப்பை: சூரியகுமார் தலைமையில் இந்திய அணி! துணை கேப்டன் ஷுப்மன் கில்!

ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 அணி செவ்வாய்க்கிழமை மதியம் அறிவிக்கப்பட்டது.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்த... மேலும் பார்க்க

ஆசிய கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் தேவையா.? தமிழக முன்னாள் வீரர் கேள்வி

ஆசியக் கோப்பை அணித் தேர்வில் ஷுப்மன் கில்லை திடீரென தேர்வு செய்யப்பட வேண்டியது ஏன்? என தமிழக முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கேள்வியெழுப்பியுள்ளார்.இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் பங்க... மேலும் பார்க்க

டிராவிஸ் ஹெட் சுழலில் சிக்கிய தெ.ஆ..! மார்க்ரம் அரைசதம்: ஆஸி.க்கு 297 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 296 ரன்கள் குவித்துள்ளது.ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் வ... மேலும் பார்க்க