செய்திகள் :

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவு!

post image

மும்பை: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு குறித்த நம்பிக்கை மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான மாற்றங்களுக்குப் பிறகு இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99 ஆக நிறைவடைந்தது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இடையேயான சந்திப்பிற்குப் பிறகு, அமெரிக்காவின் கூடுதல் வரிகள் குறித்த கவலைகள் தளர்த்தப்பட்டதால், ரூபாய் நேர்மறையாக வர்த்தகம் ஆவதாக எதிர்பார்க்கப்படுவதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 87.24 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு குறைந்தபட்சமாக ரூ.87.31 முதல் அதிகபட்சமாக ரூ.86.92 என்ற வரம்பில் வர்த்தகமான நிலையில், முந்தைய முடிவை விட 40 காசுகள் உயர்ந்து ரூ.86.99ஆக நிறைவடைந்தது.

நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 20 காசுகள் உயர்ந்து ரூ.87.39 ஆக நிறைவடைந்தது.

இதையும் படிக்க: காளையின் ஆதிக்கம்: தொடர்ந்து ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

The rupee appreciated 40 paise to close at 86.99 against the US dollar on Tuesday

காளையின் ஆதிக்கம்: தொடர்ந்து ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் காளைகள் தங்கள் பிடியை இறுக்கியதால், இந்திய பங்கு குறியீடுகள் தொடர்ந்து நான்காவது நாளாக லாபத்தில் முடிவடைந்தன. முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை கொள்முதல் செய்ததும், அத... மேலும் பார்க்க

கீழே விழுந்தால் சேதமாகாது, அதிக பேட்டரி: அறிமுகமாகிறது ரெட்மி நோட் 15 பிளஸ்!

Redmi Note 15 Pro+ Display, Battery Specifications Confirmed Days Ahead of Launch in Chinaரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் இந்த வாரம் அறிமுகமாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் வெளி... மேலும் பார்க்க

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

நேற்று பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்றும்(ஆக. 19) ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,319.11 என்ற புள்ளிகளில் தொடங்கிய ... மேலும் பார்க்க

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஆக.19), கிராமுக்கு ரூ.320 குறைந்து விற்பனையாகிறது.வாரத்தின் துவக்க நாளான நேற்று விலையில் எந்த மாற்றமுமின்றி இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.320 குறைந்து ரூ... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 22ல் தொடங்கும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் ஐபிஓ!

மும்பை: வெல்டிங் எலக்ட்ரோட்ஸ் மற்றும் எம்ஐஜி கம்பிகள் உற்பத்தியாளரான கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் (இந்தியா) லிமிடெட், அதன் ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு, பங்கிற்கு ஒன்றுக்கு ரூ.82 முதல் ரூ.87 என நிர்ணயித... மேலும் பார்க்க

ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!

புதுதில்லி: தீபாவளிக்குள் ஜிஎஸ்டி-யில் பெரும் சீர்திருத்தங்களைச் செய்வதற்கான திட்டங்களால், ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 8 சதவிகிதம் உயர்ந்து முடிந்தன. இதனை தொடர்ந்து... மேலும் பார்க்க