கபிலராக மாறி வேள்பாரியை நான் உணர்ந்த தருணம்! - கற்பனையின் வலிமை | #என்னுள்வேள்பாரி
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
மூக்கை விடைத்தபடி பாய்ந்துப் கொண்டிருந்தன குதிரைகள் என்று முதலடியிலேயே கற்பனைக்குள் என்னை கூட்டி சென்றது. பழக்கமில்லாதவர்கள் தொட்டால் குதிரைகள் திரும்பிக் கொள்ளும் என்று சொல்லுகிற பொழுது விலங்கினகளின் மனநிலையையும் கூறியிருக்கிறாரே. நாட்டு நாவல் பழம், நரி நாவல் பழம் என்று நாவல் பழத்தின் வகைகளைச் சொல்லி, ஒவ்வொரு நாவல் பழத்தின் சுவையும் சொல்லும் போது. என் நாக்கு நீலமானது. நாவல் பழத்தினைத் திண்ணாமலே! உதிரப்போக்கு நிற்பதற்கு சில நாவல் பழங்கள் உதவும் என்பதெல்லாம் வரமாக, நாவல் பழத்தை நினைக்கச் செய்தது. நான் நாவப்பழம் என்று சொன்னால். அது ஒரே ஒரு நாவல் பழம் தான். அது நாட்டு நாவல் பழம்.

இப்பொழுது ஹைபிரிட் நாவலம் சதைப்பற்றுடன் கிடைக்கின்றன. இவை தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. ஆனால் அந்தப் பறையன் என்ற 97 வயது முதியவர். அந்த நாவப் பழத்தின் சுவைகளைச் சொல்லி உண்ணுகிற பொழுதும் அதன் விதையைக் கடித்துவிட கூடாது என்ற பொழுதும். அது கபிலருக்குச் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. எனக்குச் சொன்னதாகவே நான் உணர்ந்தேன். கபிலனுக்கும் நீலனுக்கும் இடையில் நடக்கின்ற உரையாடல்களில் கபிலர் வியப்பில் ஆழ்ந்தாரோ? இல்லையோ நீலனால் நான் வியப்பில் ஆழ்ந்தேன். ஒரு எழுத்துக்கு முக்கியம் கற்பனையைத் தோற்றுவிக்க வேண்டும். அதை நன்கு அறிந்து வேள்பாரி நாவலை சு.வெங்கடேசன் எழுதியது சிறப்பு. இடையில் வரையப்பட்ட மணியம் செல்வன் ஓவியங்கள் மேலும் கற்பனைக்கு வலுச்சேர்த்தது.
ஒரு உரையாடலில் சுவாரஸ்யம் எப்போது தொத்திக்கொள்ளும் என்றால். உரையாடல் செய்யும் இருவரில், ஒருவர் நிறைய புதுப்புது செய்திகளைக் கூறும் போது, அது வாசகரானாகிய எனக்கும் புதியதாக இருக்கும் போது. ஆம் நான் வேள்பாரியைப் படிக்கும் போதுச் சில கதாபாத்திரங்களுடன், என்னைக் கற்பனைச் செய்வேன். அப்படி கபிலராக என்னை நினைத்தேன். காரணம் பாரியைப் பற்றி அறியாதவன் நான். வாய்வழியாக அறிந்தே அப்படி என்ன செய்து விட்டார், இந்த பாரி என்று கபிலரைப் போலவே எனக்கும் பாடத்தோன்றியது.

பறம்பு மலைக்குள் அடியெடுத்து வைத்த கபிலரைப் போல வேள்பாரிக்குள் நுழைந்த எனக்கும் கிடைத்தது பொக்கிஷம். பனைமரத்து அடியில் உட்கார வைத்து விட்டு சென்றான். பனைமரம் எங்களின் குலச்சின்னம் மனிதனுக்கு மட்டுமல்ல பரம்பு மலையின் எல்லாம் உயிர்களுக்கும் அது தெரியும். அதனிடம் ஒப்படைத்து விட்டுப் போனால், எந்த ஆபத்தும் வராது. அதனால்தான் பனை அடிவாரத்தில், உங்களை உட்கார வைத்தேன், மரம் மனிதைக் காக்கும் என்று நான் உணர்ந்ததை. மீண்டும் நீலன் எனக்கு உணர்த்தினான்.
பன்றிக்கறி தின்ற கபிலருக்கு இன்னும் திண்ண வேண்டி ஆசை வந்த பொழுது. எனக்கும் வந்தது ஆசை, காரணம் கைவிரலிடுக்குகளில் வழிந்தொழுகும்படி உண்டதை சு. வெங்கடேசன் எழுதிய விதம். அங்கு ஒரு தாய் தன்பசி பொறுத்து குழந்தைக்குப் பாலுட்டும் போது உலகத்தில் சிறந்த உணவு தாய்ப்பால் தான் என்று தோன்றி என் அம்மாவின் முகம் பார்த்தேன். இவ்வாறு கபிலராக வேள்பாரியை உணர்ந்த நானும் பாரி புகழ்பாட தொடங்கினேன்.

பாரியுன் புகழ்பாட பாரும் போதாது
மாரியென்ன ஒப்போ
மண்டியிடும் உன்முன்னே
நீ மாண்டுப்போன செய்தி கேட்டு
பறம்பு வாழுயிரிகள்
கதறி அழுத சத்தம்
இன்னும் கேட்குது
என்செவிக்குள்
எங்கள் வீட்டில் ஒரு கோழி வளர்த்தோம். அது பதினோறுக் குஞ்சிகளைப் பொறித்தது. ஒவ்வோரு குஞ்சிகளையும் ஒரு கழுகு தூக்கிச் சென்றது. அப்போது யோசித்து அழுததுண்டு. காரணம் கழுகினைக் கொல்ல ஒரு உயிருமில்லை. அதன் பிறகு வேள்பாரி நாவலில் காக்காவிரிச்சி பற்றிய அறிமுகம். பறம்பு மலையில் அதைப் பார்த்த பத்து பேருடன் என்னையும் சேர்த்து பதினொன்றாக மாற்றியது. கழுகின் இரத்தம் உண்ணும் காக்காவிரிச்சி மீது கோபம். கழுகு மீது இப்போது பரிதாபம் தோன்றியது. காக்காவிரிச்சி தாக்கி மனைவி இறந்ததை பகிரகேட்டு. அதுவரை கழுகினைக் கொல்ல ஒரு உயிருமில்லை அது தனது அலகுகளை தானே உடைத்து. மீண்டும் உயப்பறக்கும் அதற்கு இயற்கையாக மட்டுமே மரணம் நிகழும், என்று நினைந்த எனக்கும். காக்காவிரிச்சி தலையில் தாக்கியது. ஆனால் நான் சாகவில்லை எழுதத்துவங்கினேன்.
நன்றி ஆனந்த விகடன்
