செய்திகள் :

சென்னை உலகத்திற்குள் ஒரு நாள்! - இளைஞரின் அனுபவப் பகிர்வு |#Chennaidays

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

 மெட்ராஸ்  எனக்காக காத்துக் கொண்டிருந்தது. பேருந்தில்  ஏறி காலை நீட்டி உக்கார   முடியாத படியாக இருந்தது இருக்கை.  6 மணி நேர பயணத்தில் கும்பகோணத்தில் இருந்து சென்னை வந்திறங்கினேன்.  விடிய  காலை 3 மணி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். நிறைய மனிதர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். பேருந்து முனையத்தில் சிறுநீர் கழிப்பிடம் தூய்மையாக இருக்காது.ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து  நிலையத்தில் சிறுநீர் கழிப்பிடத்தை பார்த்த பொழுது நான் வியந்தேன். அங்கிருக்கும் தூய்மை பணியாளர்கள் காசும் கேட்பதில்லை.

தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருக்கிறார்கள். அவ்வளவு தூய்மையாக இருந்தது சிறுநீர் கழிப்பிடம். குடிப்பதற்கு நீர் அந்த பேருந்து நிலையத்திலேயே வந்து கொண்டிருந்தது. அதையும் பருகினேன். இரவு 4 மணி இல்லை இல்லை. விடிய காலை 4 மணி என்ன செய்வது. நான் எங்கே போக வேண்டும். சென்னை உலகத்திற்குள்  செல்ல வேண்டும். சரி புறநகர பேருந்து நிலையத்திற்கு சென்றேன்.

அங்க இருக்க கூடிய குளியலறைக்குச் சென்று குளித்து விட்டு அங்கே இலவசமாக அனைத்தையும் செய்துவிட்டு, எஸ்கே லெட்டரில் மெல்ல கீழே இறங்கினேன். நான் இருப்பது பேருந்துநிலையமா அல்லது விமான நிலையமா? என்று எனக்கே குழப்பம் ஏற்பட்டது. பிறகு நான் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களையும் வியந்துப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது. சூரியன் மெல்ல மேகத்தில் இருந்து எட்டி என்னை பார்த்தது. சூரியனே! சூரியனே!

சென்னைக்கு உன்னை அழைக்கின்றேன். என்று சூரியனைச் சென்னைக்கு அழைத்துக் கொண்டு உள்ளேபுறப்பட்டேன் வடபழனி முருகன் கோயிலுக்கு நேராக வந்து கோயிலில் இறங்கினேன். நேராக முருகர் தரிசனம் கோயிலைச் சுற்றி அன்றைக்குத் திருமண நாள் வேறு, நிறைய திருமணங்கள் நடந்துக் கொண்டிருந்தன எல்லாரும் ஒருவரை மட்டுமே திருமணம் செய்தார்கள். முருகன் மட்டும் வள்ளியும் தேவனையும் திருமணம் செய்து கொண்டிருந்தார். பிறகு முருகனை வணங்கிவிட்டு மெல்ல வெளியே வர தொடங்கினேன். வலது பக்கம் திரும்பினேன். வந்து கொண்டே இருந்தேன் கமலா தியேட்டர், அடுத்து விஜயா மருத்துவமனை.

அதற்குப் பிறகு சத்யா மூவிஸ் தியேட்டர். அதற்குப் பிறகு பரணி ஸ்டுடியோஸ். பறந்து போ   நிகழ்வு இன்று மாலை 6.30க்கு. இங்குதான? ஆம் என்றார்கள். சரி அதுவரை என்ன செய்வது. விரைந்து வந்து விட்டோமே! என்று விஜயா மாலுக்குள் நுழைந்தேன். வாசலில் தடுத்தார்கள், நேரம் இன்னும் ஆகவில்லை சிறிது நேரம் ஆகும். வெளியே நிற்க என்றார்கள். பத்து மணியானது. ஊழியர்கள் உள்ளே சென்று அனைத்து பதிவுகளும் திறந்தார்கள். உள்ளே சென்று வாட்ச்கடை மேலே இருந்தது. திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.

பார்க்கலாமா என்று தோன்றியது. இதுவரைக்கும் ஐ மேக்ஸ் திரையில் திரைப்படம் பார்த்தது இல்லை. பிறகு வேண்டாம் என்று பணம் பற்றாக்குறையின் காரணமாக வந்து விட்டேன். விளையாட்டுச்சாம இருக்கும் கடைக்குக்குள் நுழைந்தேன். ஒரு மாலுக்குள் சென்று வெறுங்கையோடு சென்றவனில்லை. அதிசயத்திலும் அதிசயம் அத்தனை பேர்கள் என்னிடம் வந்த உதவிகள் கேட்டார்கள்.

ஆசிரமம் நடத்துகிறோம். அதற்காக டொனேஷன் தேவை. இந்த மாதிரி ஒரு வேலை வாய்ப்பு நிறுவனம். இந்த மாதிரி ஐடியாக்கள் இருக்கிறது. என்று ஒரு நான்கு ஐந்து பேர். சாதாரணமாக கையில் ஒரு ஆயிரம் ரூபாய் வைத்துக் கொண்டாவது செல்ல வேண்டும். என்று சூழ்நிலையில் புரிய வந்தது. ஏரியும் இறங்கியும் பொழுதை போக்கிக் கொண்டிருந்தேன்.

அங்கும் சிறுநீர் கழிப்பிடம் சென்று மீண்டும் வெளியே வந்து இவ்வாறாக பொழுதுகள் போய்க்கொண்டிருந்தது. Starbucks coffee  300 ரூபாய் சரி அதை பருக்கி பார்ப்போம். வாழ்வில் ஒருமுறையாவது பருகிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை. ஆர்டர் செய்த பொழுது கடைமாறி வந்து விட்டீர்களா? என்று என்னை ஏளனம் செய்தார்கள்.

என்னுடையைப் பார்த்து சரி என்று  கொடுங்கள் என்று சொன்னேன். 275 தான் தொடங்கியது. அந்த காபி கேட்டேன். அதை கொடுத்தார்கள் சிக்னேச்சர் ஸ்பெஷலிஸ்ட் அதுல அவர்கள் ஒரு கையெழுத்தை போட்டுக் கொடுத்தார்கள். அதற்கு 300 ரூபாயா! சூடு ஆறுவதற்குள் கடகட என்று குடித்து விடுவேன்.

ஆனால் கொஞ்சம் பொறுமையாக குடிக்க வேண்டும். என்று அந்த 300 மனதிற்குள் இருந்த அழுத்தியது சரி என்று மெல்ல மெல்ல ஒவ்வொரு மடக்காக குடித்து குடித்து குடித்து ஒரு மணி நேரம் ஒன்ற மணி நேரம். அங்கேயே பொழுது போக்கினேன். பிறகு மாலை 6 மணி என் இயக்குநர் ராம் பறந்து போ பார்த்து வியந்தேன். திரைக்குவராத முன்பே. முதல்முறை ராம் சாரை நேரில் பார்த்தேன்.

எதுவும் பேசவில்லை ஒருநாள் என் திரைப்படத்தை பார்த்து அவர் பேசுவார் என்ற நம்பிக்கை.  நடந்து வருகிற போது கால் பயங்கரமாக வலித்தது. கொஞ்சம் மனசும். பேருந்து கிடைக்கவில்லை கிளாம்பக்கத்திற்கு கூட்டம். மழை வேற சற்று அதிகம் பெய்ந்திருந்தது.

மனதுக்குள் ராம்சாருடைய  நினைவுகள். ஒரு திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பாகவே இரண்டு நாட்கள் முன்பாக பார்ப்பது என்பது, ஒரு அறிய வாய்ப்பை நோக்கி நன்றி சொல்ல வேண்டும் ஆனந்த விகடனுக்கு. கிளம்பாக்கத்திற்கான ஒரு பேருந்தில் ஏற முயற்சி செய்தேன்.  அது நேராக செல்ல  இரண்டு பேருந்துகள் மாறி வருவது போல  வந்து இறங்கினேன். வெளியில் மழை மனதுக்குள் இடி இயக்குநர் ஆக வேண்டுமென..

-சு.தமிழ்ச்செல்வன்

திருவாரூர்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

சென்னை மண்ணில் விழுந்தவர்களை விட எழுந்து வாழ்ந்தவர்களும், வென்றவர்களும் தான் அதிகம்! | #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சென்னையின் நிசப்தமான இரவுகளும் நீளமான பயணங்களும் : போராட்டம், நம்பிக்கை கலந்த காவியம் | #Chennaidays

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

கஷ்டப்பட்ட காலங்களில் கூட விகடன் வாங்குவதை நிறுத்தியதில்லை! - நெகிழ்ச்சி பகிர்வு #நானும்விகடனும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மெயின்கார்ட்கேட் காலனியின் எளிய விருந்தாளிகள்- 70களில் திருச்சி | கிறிஸ்துமஸ் இரவுகள் 4 | #Trichy

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

மூவேந்தரை மூழ்கடித்த வேளிர்குல வேந்தன்! - ஒரு தேசத்தின் பெருங்கனவு | #என்னுள்வேள்பாரி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எங்கள் மொட்டை மாடி அரட்டைகளை அர்த்தமுள்ளதாக்கிய விகடன்! - ரசனையின் வழிகாட்டி | #நானும்விகடன்