ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
அவசரமாக கோவையில் தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்! ஏன்?
கோவை: துபாயில் இருந்து கொச்சி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிறக்கப்பட்டது.
உணவு, குடிநீர் எதுவுமின்றி அவதிக்குள்ளான பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செல்போன் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மோசமான வானிலை நிலவியது, இதனால் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாமல், பல்வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
இந்த நிலையில், துபாயில் இருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கேரளம் மாநிலம் கொச்சி விமான நிலையத்திற்கு இரவு 7.30 மணிக்கு வந்த பைஸ் ஜெட் தனியார் விமானம் மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு கோவை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. பயணிகள் விமானத்திலே அமர வைத்ததாகவும், அவர்களுக்கு உணவு, குடிநீர் எதுவும் வழங்கவில்லை என்று ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரவு 2 மணிக்கு பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை கோவையில் இருந்து கேரளத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில், பயணிகள் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதம் ஈடுபடும் செல்போன் விடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.