பாஜக வாஷிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் ஒன்றும் தவறு செய்தவர்கள் அல்ல! - திமுக
இல.கணேசன் உடலுக்கு மு.க. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி அஞ்சலி
மறைந்த பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத்தைச் சேர்ந்தவரும் பாஜக மூத்த தலைவரும் நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(ஆக. 15) மாலை காலமானார்.

இல. கணேசனின் மறைவுக்கு பாஜக தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த திரு.இல.கணேசன் அவர்களின் திருவுடலுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுடன் இணைந்து இன்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம். பொதுவாழ்வில் அரசியலுக்கு அப்பாற்பட்டு எல்லோருடனும் நட்பு பாராட்டியவர் திரு.இல.கணேசன் அவர்கள். அவரது குடும்பத்தார் - நண்பர்களுக்கு… pic.twitter.com/1KuGMzCszw
— Udhay (@Udhaystalin) August 16, 2025
முன்னதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டு அரசியலின் மூத்த தலைவரும், தமிழ் இலக்கிய வெளியில் மிகுந்த ஆர்வத்துடன் இயங்கிய தலைவர்களில் ஒருவரும், பொது வாழ்வுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான நாகாலாந்து மாநில கவர்னர் திரு. இல. கணேசன் அவர்களது உடலுக்கு மரியாதை செலுத்தினேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 16, 2025
அவரை இழந்து வாடும்… pic.twitter.com/9C5gdoaN7I