இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பாஜகவுடன் இல்லை! -பிரசாந்த் கிஷோர்
'Miss India, மாநில விருது, பிக்பாஸ்' - கேரள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவர் ஸ்வேதா மேனன் யார்?
கேரள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists)-வின் முதல் பெண் தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
31 ஆண்டுக்கால கேரள நடிகர் சங்கத்தின் வரலாற்றில் பெண் ஒருவர் தலைவராகத் தேர்வு செய்யப்படுவது என்பது இதுவே முதன்முறையாகும்.

யார் இந்த ஸ்வேதா மேனன்?
ஸ்வேதா மேனன் 1974 ஏப்ரல் 23-ஆம் தேதி சண்டிகரில் பிறந்திருக்கிறார்.
மலையாளத் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தொகுப்பாளினியாகவும், மாடலாகவும் தனித்த பெயர் பெற்றவர்.
1994-ஆம் ஆண்டு ‘Femina Miss India’ பட்டத்தை வென்றிருக்கிறார்.
1991 ஆம் ஆண்டு ஜோமன் இயக்கிய மலையாளத் திரைப்படமான அனஸ்வரம் படத்தின் மூலம்தான் நடிகையாக ஸ்வேதா மேனன் அறிமுகமாகி இருக்கிறார்.
பல மலையாளத் திரைப்படங்களில் நடித்த இவர் தமிழ், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
‘பரயும்போல்’, ‘பல்யக்கலக்காஷி’, ‘சால்ட் அண்ட் பெப்பர்’ போன்ற படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் 'நான் அவன் இல்லை', 'உயிரின் ஓசை', 'சலீம்' போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக 2009 ஆம் ஆண்டு வெளியான 'பலேரி மாணிக்யம்: ஒரு பத்திரகோலபாதகத்தின் கதை' என்ற படத்திற்காவும், 2011 ஆம் ஆண்டு வெளியான 'சால்ட் அண்ட் பெப்பர்' படத்திற்காவும் இரண்டு முறை சிறந்த நடிகைக்கான கேரள மாநில விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

தவிர சைமா, ஃபிலிம்பேர் போன்ற விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
'ஸ்டார் வார்ஸ்', 'டான்சிங் குயின்' உள்ளிட்ட சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய இவர் மலையாள பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.
இதனிடையே ஸ்வேதா மேனன் ஆபாசப் படங்களில் நடித்ததாகக் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இதனால் அவர் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கக்கூடாது என்ற எதிர்ப்புகளும் இருந்தன.
இருப்பினும், பல்வேறு சர்ச்சைகளையும், கடுமையான எதிர்ப்புகளையும் மீறி, அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...