ஆடிக் கிருத்திகை: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்!
AMMA: "ஆபாசக் குற்றச்சாட்டுகளைக் கேட்டால் என் மகள்களின் மனநிலை என்னவாகும்?" - நடிகை ஸ்வேதாவின் கணவர்
மலையாள நடிகர் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) தலைவர் தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வரலாற்று வெற்றி பெற்று, முதல் பெண் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையைத் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் பிற பிரச்னைகள் காரணமாக மொத்தமாக நடிகர்கள் பொறுப்புகளிலிருந்தவர்கள் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து ஆளுமைமிக்க பெண் தலைவர் பதவியிலிருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆதரவுகள் பெருகி ஸ்வேதா மேனன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

இதற்கிடையில் ஸ்வேதா தலைவர் பதவிக்கான தேர்தலில் நிற்கும்போதே, அவர் ஆபாசப் படங்களில் நடித்ததாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளையும், வழக்குகளையும் தொடுத்தனர். இவற்றையெல்லாம் தாண்டி இப்போது மலையாள நடிகர் சங்க வரலாற்றில் முதல் பெண் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் சமயத்தில் ஸ்வேதா மீது நிகழ்த்தப்பட்ட ஆபாச குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசியிருக்கும் ஸ்வேதாவின் கணவர் ஶ்ரீவல்சன், "ஸ்வேதா தலைமை பண்புமிக்கவர், நிச்சயம் சிறப்பாகப் பணியாற்றுவார்.
ஆபாசமாக நடித்திருக்கிறார் என்று ஸ்வேதா போட்டியிடும்போதே வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ஸ்வேதா மீதான நல்ல பிம்பத்தை உடைக்கவே இதுபோன்ற வழக்குகளைப் போட்டனர்.
அந்தச் சமயத்தில் ஏராளமான ஆபாச குற்றச்சாட்டுகளைக் கிளப்பிவிட்டனர். அதையெல்லாம் கேட்டு எங்களின் இரு மகள்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள், அவர்களின் மனநிலை என்னவாகும் போன்றவைதான் பெரும் கவலையாக இருந்தன.
ஸ்வேதாவும் உடைந்துபோய்விடுவார் என்று பயந்தேன். ஆனால் அவர் தைரியமாக எதையும் எதிர்கொண்டார். நல்லவேளையாகச் சட்டமும், நீதியும் எங்கள் பக்கமே இருந்தது" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...