Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
உலகளாவிய போர்களால் பாலியல் வன்முறைகளும் 25% அதிகரிப்பு!
உலகளவில் போர்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக ஐநா அவை கவலை தெரிவித்துள்ளது.
உலகளவில் நிகழ்த்தப்படும் போர் மற்றும் உள்நாட்டு மோதல்களின்போது பாலியல் வன்முறை சம்பவங்களும் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஐநா அவை கவலை தெரிவித்துள்ளது.
இது முந்தைய ஆண்டைவிட அதிகமாகும். இந்த பாலியல் வன்முறைகளில் பெண்களும் சிறுமிகளுமே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர்.
21 நாடுகளில் காங்கோ, மத்திய ஆப்பிரிக்க குடியரசு, சோமாலியா, ஹைதி, தெற்கு சூடான் போன்ற நாடுகளில்தான் அதிகபட்ச பாலியல் வழக்குகள் பதிவாகியுள்ளன.
பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக 63 அரசு மற்றும் அரசுசாராத ஆயுதமேந்திய அமைப்புகளின் பெயர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், அடுத்தாண்டில் இஸ்ரேல் மற்றும் ரஷியாவின் படைகளும் சேர வாய்ப்பிருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது.