சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
எம்எல்ஏ விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது புகார்
சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள எம்எல்ஏக்கள் விடுதியில் அத்துமீறி அமலாக்கத்துறையினர் உள்ளே நுழைந்ததால், வெளிநபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.
சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எந்த ஒரு அனுமதியும் இன்றி உள்ளே நுழைந்து பின்னர் ஐ. பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமாரின் எம்எல்ஏ அறையை திறந்து விடக் கோரி கேட்டனர். சட்டமன்ற உறுப்பினர் செயலாளர் சீனிவாசன், அறையின் சாவியை கொண்டு வந்து கொடுத்ததும், அறையை சோதனை செய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும் சட்டமன்ற உறுப்பினரின் செயலாளர் சீனிவாசன் திருவல்லிக்கேணி காவல்துறையினரிடம் சட்டமன்ற உறுப்பினரின் வளாகத்திற்கு உள்ளே அத்துமீறி நுழைய முயன்ற வெளிநபர்கள் நான்கு பேர் மீது புகார் கொடுத்துள்ளார்.
புகாரை அடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் மீதும் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர் செயலாளர் சீனிவாசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமலாத்துறை அதிகாரிகளுடன் 5 சிஆர்பிஎஃப் வீரர்கள், துப்பாக்கி ஏந்தியபாடி பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் அறையை சோதனை செய்யும் முன்பாகவே ஆதாரத்துக்காக காணொளி காட்சிகளும் எடுத்து வைத்துக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.