Trump: "புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்..." - அமைதிக்கு அமெரிக்கா க...
தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்... விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணைகிறார்கள் என்கிற அறிவிப்பு வந்தபோதே பலருக்கும் ஆர்வம் மேலோங்க, தொடர்ந்து, கூலி திரைப்படத்தில் நடிகர்கள் நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் உள்ளிட்ட பிரபலங்கள் இணையவும் நிச்சயமாக வணிக ரீதியாக இப்படம் தமிழில் சாதனையை நிகழ்த்தும் என கணிக்கப்பட்டது.
மேலும், தமிழ் சினிமாவில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் திரைப்படமாக கூலி இருக்கும் எனப் பலராலும் நம்பப்பட்டது.
இந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கூலி வியாழக்கிழமை மிகப் பிரம்மாண்டமாக பல திரைகளில் வெளியானது. லோகேஷ் கனகராஜ் ஏதாவது வித்தியாசமாக செய்திருப்பார் என ரசிகர்கள் பெரிய ஆவலில் இருந்தனர்.
ஆனால், கதையும் திரைக்கதையும் மோசமாக இருந்ததால் கூலி எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. எந்த கதாபாத்திரமும் சரியாக எழுதப்படாதது உள்ளிட்ட ஏகப்பட்ட லாஜிக் பிரச்னைகள் திரைக்கதையில், காட்சி உருவாக்கத்தில் இருக்கின்றன.
இதனால், ரசிகர்கள் பலர் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறி இயக்குநர் லோகேஷ் கனகராஜைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முக்கியமாக, ’தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான். நேர்காணல்களில் சினிமா குறித்தும் கூலி குறித்தும் பெரிதாகப் பேசிவிட்டு, படத்தில் சொதப்பியுள்ளார். ரசிகர்களை முட்டாள்கள் என நினைத்தால் மட்டுமே இப்படிப்பட்ட கதையை ஒருவரால் எழுத முடியும்” எனத் தாக்கி வருவதுடன் கூலி திரைப்படத்தை கேலி செய்தும் வருகின்றனர்.
அதேநேரம், இந்த ஒரு திரைப்படத்தைக் காரணம் காட்டி லோகேஷை மட்டம்தட்ட வேண்டாம் என சிலர் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நம்பவே முடியவில்லை... ரஷ்மிகா உற்சாகம்!