பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: `RSS' - காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுக...
சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் காவலர் அதிகாரி தற்கொலை
சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை காவல் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரின் டல்லிராஜ்ஹாரா காவல் நிலையத்தில் உதவி துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ஹீராமண் மண்டாவி. இவர் சனிக்கிழமை காலை தனது முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக நகர காவல் கண்காணிப்பாளர் சித்ரா வர்மா தெரிவித்தார்.
உடனே ஹீராமண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்கொலைக்கான குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை. இருப்பினும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரி மேலும் கூறினார்.
சென்னையில் பரவலாக மழை! அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்?
மாநில அரசின் தரவுகளின்படி, கடந்த ஆறரை ஆண்டுகளில் சத்தீஸ்கரில் துணை ராணுவப் படைகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 177 பாதுகாப்புப் பணியாளர்கள் குடும்பம் மற்றும் தனிப்பட்ட பிரச்னைகள், மதுவுக்கு அடிமையாதல் மற்றும் உடல்நலக்குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.