RSS:``மோடியின் நடவடிக்கை வரலாற்றை மறுக்கும் செயலா..." - கண்டனங்களை பதிவு செய்த க...
இந்தியாவுடன் பொருளாதார சவால்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது: தென் கொரிய வெளியுறவு அமைச்சர்
இந்தியாவுடன் பொருளாதார சவால்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ யுன் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சர் எஸ். சிவசங்கர் உடனான சந்திப்பு குறித்து அவர் பேசியதாவது: "அவர் வெளியுறவு செயலராக இருந்தபோதே அவருடன் நான் பழகிப் பேசியிருக்கிறேன். நாங்கள் பல்வேறு பிரச்சினைகளைப் பற்றி விவாதித்துள்ளோம்.
இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்தும், அதற்கான வழிகள் பற்றியும் பேசினோம். அதில், நிகழ்கால புவி அரசியல் மற்றும் நம் இரு நாடுகளும் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்கள் பற்றியும் ஆலோசித்துள்ளோம்” என்றார்.