பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!
அமைச்சர் ஐ.பெரியசாமி தொடா்புடைய இடங்களில் சோதனை நிறைவு
சென்னையில், அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் கடந்த 9 மணி நேரமாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது.
பல முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. பணமோசடி வழக்கில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிப்பு
இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் துரைராஜ் நகரில் உள்ள வீட்டிலும், திண்டுக்கல் மாவட்டம் சிலப்பாடியில் உள்ள பழனி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் அவரது மகனுமான ஜ.பி. செந்தில்குமார் வீட்டிலும் அதிகாலை முதல் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.