பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு! உயிரிழப்பு 300-ஐ கடந்தது!
வாக்குத் திருட்டு விவகாரம்: மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே வாக்குரிமைப் பேரணி! -தேஜஸ்வி
வாக்குத் திருட்டு விவகாரத்தில் முக்கிய நகர்வாக மெகா பேரணி பிகாரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறோம் என்று பிகார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்திரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகாரில் ‘இண்டி’ கூட்டணிக் கட்சித் தலைவா்களுடன் இணைந்து, வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநிலம் முழுவதும் வாக்குரிமைப் பேரணியை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மேற்கொள்கிறாா்.
நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இந்நிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பான முறைகேடுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை மேற்கொள்ள எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இது குறித்து, தேஜஸ்வி யாதவ் இன்று(ஆக. 16) தெரிவித்திருப்பதாவது: "‘வாக்கு அதிகார யாத்திரையை’ சாசாராம் பகுதியிலிருந்து நாளை(ஆக. 17) நாங்கள் தொடங்குகிறோம். ‘மகாகாத்பந்தன்’ கூட்டணிக் கட்சிகளுடன் நங்கள் அனைவரும் நாளை நிற்போம்.
இந்தப் பேரணியில் நாங்கள் பல மாவட்டங்களுக்குச் செல்வோம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்களின் இந்த முயற்சி. இதன்மூலம், எந்தவொரு வாக்காளரின் பெயரும் விடுபடவில்லை என்பதை அடைய முடியும்” என்றார்.