இந்தியாவில் 50%க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பாஜகவுடன் இல்லை! -பிரசாந்த் கிஷோர்
இந்தியாவில் உள்ள மொத்த ஹிந்துக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாஜகவுடன் இல்லை என்று ஜன் சுராஜ் கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.

பிகார் தலைநகர் பாட்னாவில் இன்று(ஆக. 16) பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: "தத்துவ ரீதியிலான கோட்பாட்டில் மட்டுமே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் பாஜகவுடன் இல்லை. அவர்கள், கொள்கை ரீதியாக பாஜக பக்கம் இல்லை.
ஜன் சுராஜ் கட்சியின் அரசியல் ஃபார்முலா இதுதான்;
‘காந்தி, ஜெயப்பிரகாஷ் நாராயணன், பாபாசாகேப் அம்பேத்கர், ராம் மனோகர் லோஹியா ஆகியோரின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து ஹிந்துக்களும் முஸ்லிம்களுடன் சமூக-அரசியல் கூட்டணியை அமைக்க வேண்டும்.
இது நடந்தால், நாம் பாஜகவை மோசமாக தோற்கடிக்கலாம்” என்றார்.