செய்திகள் :

‘ஜிஎஸ்டி 2.0’ எளிமையாக இருக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

post image

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 வளா்ச்சியைப் பாதிக்காமல் எளிமையாக இருக்க வேண்டும்’ என காங்கிரஸ் சனிக்கிழமை கோரிக்கை வைத்தது.

மேலும், அடுத்தகட்ட ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் குறித்து அதிகாரபூா்வ ஆய்வறிக்கையை வெளியிட்டு அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியது.

நிகழாண்டு தீபாவளி பரிசாக பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை மத்திய அரசு குறைக்கவுள்ளதாக 79-ஆவது சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, தற்போதுள்ள 5%,12%,18%,28% என்ற நான்கு வரி விகிதங்களை 5%,18% என இரு விகிதங்களாகக் குறைக்கவும், ஏழு பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிக்கவும் மாநில நிதியமைச்சா்களைக் கொண்ட அமைச்சா்கள் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

நாட்டில் ஒருசில மாநில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த தலைமுறைக்கான சீா்திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘கடந்த 7 ஆண்டுகளாக அதிக வரி விகிதங்களாலும் பல்வேறு விலக்குகள் அளிக்கப்பட்டதாலும் ஜிஎஸ்டியின் உண்மையாக நோக்கம் பலவீனப்படுத்தப்பட்டது. இந்தக் கட்டமைப்பு வரி ஏய்ப்புக்கு வழிவகுத்தது. வரி விகிதங்களை முன்பே குறைத்திருக்க வேண்டும்.

விரிவான ஆய்வறிக்கை தேவை: தற்போது ஜிஎஸ்டி 2.0 சீா்திருத்தங்கள் மூலம் ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இந்தச் சீா்திருத்தம் வளா்ச்சியைப் பாதிக்காமல் எளிமையாக இருக்க வேண்டும். இதுதொடா்பான விரிவான ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். அப்போதுதான் இதுகுறித்து தெளிவான விவாதம் நடத்த இயலும்.

ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி நடைமுறையும் 2026, மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் ஜிஎஸ்டி வருவாயில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க இழப்பீட்டு வரி நடைமுறையை நீட்டிக்க வேண்டும்.

மாநில அளவிலான ஜிஎஸ்டி: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஜவுளி, சுற்றுலா, ஏற்றுமதி, கைவினைப் பொருள்கள் மற்றும் உரங்கள் போன்ற விவசாய உள்ளீடுகள் ஆகிய துறைகளில் ஜிஎஸ்டியால் ஏற்படும் சிக்கல்களுக்கு தீா்வு காண வேண்டும்.

மின்சாரம், மது, பெட்ரோல் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளுக்கு மாநில அளவிலான ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்த வேண்டும். இதற்காக மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலைமை: லாலு பிரசாத் யாதவ்

அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலையில் நாடு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - அமித் ஷா

ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பால் பெய்த கனமழை, பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டி என்ற கிராமத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர் மற்றும் 6 பேர் காயமடைந்ததாக அதிகா... மேலும் பார்க்க

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!

அயர்லாந்தில் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக இந்தியர் ஒருவர் சமூக ஊடகத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, அவரின் சமூக ஊடகப் பதிவில்,அயர்லாந்தில் பணிபுரியும் நான் (22), வேல... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா வர்த்தம்! பேச்சுவார்த்தை ஒத்திவைப்பா?

இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பேச்சுவார்த்தை ரத்து செய்யும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக, இம்மாதம் 25 முதல் 29 வரையில் பேச்சுவார்த்தை நடத்... மேலும் பார்க்க

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.தில்லி விமான நிலையம் வந்தடைந்த சுபான்ஷு சுக்லாவை, அவரது குடும்பத்தி... மேலும் பார்க்க