செய்திகள் :

தூய்மைப் பணியாளர் போராட்டம்! பணிநிரந்தரம் கூடாது என்பதுதான் சரி!

post image

விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் தூய்மைப் பணியாளர் போராட்டம் குறித்து அவர் பேசினார்.

தனது பிறந்தநாள் விழாவின்போது தொல்.திருமாவளவன் பேசுகையில்,

திருமாவளவன் ஏன் அரசை எதிர்த்துப் போராடவில்லை? என்று விமர்சனங்களைக் கூறுகின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் என்ற சொல்லுக்கு இன்னொரு பொருள் குப்பைப் பொறுக்குபவர்கள் அல்லது குப்பை அள்ளுகிறவர்கள். குப்பை அள்ளுகிறவர்களை பணிநிரந்தரம் செய்து, அந்தத் தொழிலையே நீங்கள் செய்து கொண்டிருங்கள் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

அதிலிருந்து மீள வேண்டும் என்பதுதான் நமது போராட்டம். அந்தத் தொழிலைச் செய்யக்கூடியவர்கள், தொடர்ந்து அதனைச் செய்யக் கூடாது. மலம் அள்ளுபவனே மலம் அள்ளட்டும்; சாக்கடையைச் சுத்தம் செய்பவனே சாக்கடையைச் சுத்தம் செய்யட்டும்; குப்பையை அள்ளுகிறவனே குப்பையை அள்ளட்டும் என்ற கருத்துக்குத்தான் இது (பணிநிரந்தரம்) வலுசேர்ப்பதாய் இருக்கிறது.

குப்பையை அள்ளுகிற தொழிலை குப்பை அள்ளுபவர்களே செய்ய வேண்டும் - அரசுப் பணியாளர்களாக அவர்களை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையில் நமக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. சொல்லப் போனால், அதனை நாம் எதிர்க்க வேண்டும்.

காலம்காலமாக இருக்கிற மரபுசார்ந்த சிந்தனை இது, அடிமைசார்ந்த சிந்தனை இது. உலக நாடுகளெல்லாம், அறிவியல், தொழில்நுட்பம்சார்ந்த கருவிகளைக் கண்டுபிடித்து, குறிப்பிட்ட இனத்தவர்தான் இந்தத் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நிலையை மாற்றியமைக்கின்றனர். அந்தத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டவன், அந்த வேலையைச் செய்யலாம் என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். இதுதான் பிற நாடுகளில் உள்ள நிலை.

ஆனால், இந்தியாவில் தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியராக்கு என்பது ஏற்புடையதாக இருக்கும். இதை அவர்களிடம் சொன்னால், நாம் அவர்களுக்கு எதிராகப் பேசுவதாகக் கருதுவார்கள். அதனால்தான், நாமும் பணிநிரந்தரம் செய்யுங்கள் என்று சொல்ல நேர்ந்தது.

பணிநிரந்தரம் செய்யக் கூடாது என்று சொல்வதுதான் சரியான கருத்து. குப்பை அள்ளுபவர்களின் குழந்தையே குப்பையை அள்ள முடியுமா? அள்ள வேண்டுமா? தலித்துகளின் பிள்ளைகள்தான் குப்பைகளை அள்ள வேண்டுமா?

அந்த வேலையை அரசுப் பணியாக்கினால் யார் வருவார்கள்? எத்தனை பேர் குப்பை அள்ள தயாராக இருக்கிறார்கள்?

70 வயதிலும் அந்தப் பணியை செய்யக் கூடியவர் இருக்கிறார் என்றால், அவர் யார் என்று நீங்கள் பார்க்க வேண்டும். இந்தத் தலைமுறை, அந்தத் தொழிலை செய்துவிட்டுப் போகட்டும். அடுத்த தலைமுறை, அந்தத் தொழிலுக்குள் போகக் கூடாது என்பதுதானே சமூக நீதி. அதிலிருந்து அவர்களை மீட்பதுதானே சமூக நீதி.

தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளில் இதுபோன்ற சிக்கல்கள் இல்லை. நாட்டை வல்லரசாக மாற்ற துடிப்பவர்கள், இன்னும் ரயில் நிலையங்களில் கைகளால் மலம் அள்ளுகிற தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள். அவர்களை அரசு ஊழியராக்குங்கள், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா? என்று தெரிவித்தார்.

பாமக பொதுக்குழு! அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் அன்புமணி மீது சில குற்றச்சாட்டுகளும் முன்வைத்தனர்.பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 5 புதிய அறிவிப்புகள்!

தருமபுரி மாவட்டத்துக்கான 5 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 17) வெளியிட்டார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 17) தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் கம்பு சுற்றுங்கள்: ஆளுநர் மீது முதல்வர் விமர்சனம்!

பாஜக ஆளக்கூடிய மாநிலங்களுக்குச் சென்று கம்பு சுற்றுங்கள், தமிழ்நாட்டில் வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 17) தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், முட... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்!

வங்கக் கடலில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்க... மேலும் பார்க்க

பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு - தீர்மானம் நிறைவேற்றம்!

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அ... மேலும் பார்க்க

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு: சூழல் சுற்றுலாத் தளம் இன்று மூடல்!

கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சூழல் சுற்றுலாத் தளம் இன்று(ஆக. 17) ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்தில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் மு... மேலும் பார்க்க