செய்திகள் :

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு!

post image

ஜம்மு - காஷ்மீர் மட்டுமில்லாது வட மாநிலங்களான உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

உத்தரகண்ட்டில் தலைநகர் டேராடூனில் உள்ள மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டேராடூன், பாகேஷ்வர், சாமோலி, சம்பாவாட், பிதோராகர், ருத்ரபிரயாக், தேரி, உத்தர்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் மாவட்ட ஆட்சியர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹிமாசல பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் இன்று(ஆக. 17) வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண்டியிலிருந்து குளு செல்லும் வழித்தடத்தில் சண்டீகர் - மணாலி தேசிய நெடுஞ்சாலையில் பனார்சா, டகோலி, நாக்வை ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Himachal Pradesh, Uttarakhand Multiple flash flood incidents reported today

தீபாவளிக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது: பிரதமர் மோடி

தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு இரட்டை போனஸ் காத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.இது குறித்து, புது தில்லியில் இன்று(ஆக. 17) நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேச... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது: ராகுல் காந்தி

வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி அமைக்கிறது என்று வாக்குரிமைப் பேரணி தொடக்கவிழாவில் ராகுல் காந்தி பேசினார்.பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்... மேலும் பார்க்க

அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலைமை: லாலு பிரசாத் யாதவ்

அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலையில் நாடு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - அமித் ஷா

ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பால் பெய்த கனமழை, பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டி என்ற கிராமத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர் மற்றும் 6 பேர் காயமடைந்ததாக அதிகா... மேலும் பார்க்க

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!

அயர்லாந்தில் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக இந்தியர் ஒருவர் சமூக ஊடகத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, அவரின் சமூக ஊடகப் பதிவில்,அயர்லாந்தில் பணிபுரியும் நான் (22), வேல... மேலும் பார்க்க