'தடுத்தார், அபகாரித்தார், கைப்பற்றினார்' - அன்புமணி மீது அடுக்கடுக்கான 16 குற்றச...
ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - அமித் ஷா
ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பால் பெய்த கனமழை, பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், இது குறித்து ஜம்மு - காஷ்மீர் முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரிடம் விவரங்களைக் கேட்டறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அப்பகுதிகளில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று உறுதியளித்தார்.
இது குறித்து இன்று காலை அவர் தெரிவித்திருப்பதாவது: "பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மீட்புப்பணிகள் உள்ளூர் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களும் அங்கு விரைந்துள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகக்கு மோடி அரசால் அனைத்து உதவியும் வழங்கப்படும். ஜம்மு - காஷ்மீரின் சகோதர சகோதரிகளுடன் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.