தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு: ‘பாரபட்சத்துடன் செயல்படவில்லை!'
கூலி படத்திற்கு குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு: வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்!
கோவை உள்ள திரையரங்கத்தில், கூலி படம் பார்க்க சென்ற குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரஜினி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் கூலி படம் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. ஆனால் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதால் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவையில் உள்ள திரையரங்கத்திற்கு குழந்தைகளுடன் சிலர் கூலி படம் பார்க்க சென்று உள்ளனர். அப்போது, திரையங்க நிர்வாகம் அனுமதி மறுத்ததால், படம் பார்க்க சென்றவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த காவல் துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி திரும்பி செல்ல அறிவுறுத்தினர்.
பொதுவாக ஒவ்வொரு திரைப்படத்திற்கும், அதன் கதை, காட்சிகள், வசனங்கள் ஆகியவற்றை பொறுத்து தணிக்கை செய்து சான்றிதழ் வழங்குவார்கள்.
அந்த வகையில் கூலி படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. விதிகள் படி ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட படங்களுக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குவார்கள். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களை திரையரங்கில் அனுமதிக்க மாட்டார்கள்.
இதை ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் போதே எச்சரிக்கையாக காட்டுவார்கள். அதையும் மீறி சில திரையரங்கங்களில் குழந்தைகளை அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - அமித் ஷா