செய்திகள் :

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு

post image

புதுச்சேரியில் ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்டக் கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல, அதன் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என அன்புமணி ஆதரவாளர் வழக்குரைஞர் கே.பாலு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

பாமக அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் பாமக பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில் தான் நடத்தப்பட வேண்டும்.

அதன்படியான பாமக பொதுக்குழு கூட்டம் கடந்த ஆகஸ்ட் 9 இல் ள் மாமல்லபுரத்தில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முறைப்படி நடத்தப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், புதுச்சேரி பட்டானூரில் இன்று(ஆக.17) நடத்தப்பட்ட கூட்டம் பாமக பொதுக்குழு கூட்டம் அல்ல. அது சட்ட விரோதமான கூட்டம். அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாமகவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என கூறியுள்ளார்.

பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி? ராமதாஸ் உறுதி!

Anbumani supporter lawyer K. Balu has stated that the meeting held in Puducherry under the leadership of Ramadoss is not the PMK general committee and its decisions will not bind the PMK.

கவின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: கிருஷ்ணசாமி

திருச்சி: கவின் ஆணவப் படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவ... மேலும் பார்க்க

அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி

சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஓர் இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் என்றும் அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாத... மேலும் பார்க்க

சின்ன கண்ணன் அழைக்கிறான்..!

மேலும் செய்திகள் மற்றும் படங்களுக்கு... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு ஆலோசனை சொல்லி வளர்த்தால் தான் விபத்துகளைத் தவிர்க்க முடியும்: எடப்பாடி பழனிசாமி

திருவண்ணாமலை: நாம் குழந்தைகளுக்கு ஆலோசனைகளை சொல்லி வளர்க்க வேண்டும். அப்போதுதான் விபத்துகளை தவிர்க்க முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீ... மேலும் பார்க்க

எம்எல்ஏ விடுதியில் அத்துமீறி நுழைந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத் துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பணமோசடி வழக்கில், தமிழக ஊரக வ... மேலும் பார்க்க

அவசரமாக கோவையில் தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்! ஏன்?

கோவை: துபாயில் இருந்து கொச்சி சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக கோவையில் தரையிறக்கப்பட்டது. உணவு, குடிநீர் எதுவுமின்றி அவதிக்குள்ளான பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தி... மேலும் பார்க்க