செய்திகள் :

மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

post image

இயக்குநர் சிதம்பரம் இயக்கும் புதிய திரைப்படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.

தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து சாதனை செய்தது.

இதனைத் தொடர்ந்து, சிதம்பரம் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதிய கதையைப் படமாக்குகிறார்.

இந்த நிலையில், இப்படத்திற்கு பாலன் தி பாய் எனப் பெயரிட்டுள்ளதைப் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். படத்திற்கு சுஷின் ஷியான் இசையமைக்க, சிஜு காலித் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையும் படிக்க: கூலி வசூல் எவ்வளவு?

director chidambaram's new film titled as balan the boy

கூலி வசூல் எவ்வளவு?

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் இணைகிறார்கள் என்கிற அறிவிப்பு வந்தபோதே பலருக்கும் ஆர்வம் மேலோங்க, தொடர்ந்து, கூலி... மேலும் பார்க்க

பராசக்தியில் அப்பாஸ்!

நடிகர் அப்பாஸ் பராசக்தி திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்த நடிகர் அப்பாஸ் பல வெற்றிப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். காதல் தேசம், ... மேலும் பார்க்க

ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!

இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் மூத்த இயக்குநர்கள் குறித்து பேசியுள்ளார். இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தாலும் இறுதியாக அவர் இயக்கங்களில் வெளியான தர்பார், சிக்கந்தர் ஆகிய திரைப்பட... மேலும் பார்க்க

அலெஹாந்த்ரோ இனாரிட்டு அழைத்தும் வாய்ப்பை மறுத்த ஃபஹத்! ஏன்?

ஆஸ்கர் விருதுவென்ற இயக்குநர் அலெஹான்ட்ரோ இனாரிட்டு பட வாய்ப்பை ஃபஹத் ஃபாசில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஃபஹத் ஃபாசில் இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். இவர் நடிக்... மேலும் பார்க்க