சென்னை, புறநகரில் பரவலாக மழை!
சென்னை மற்றும் புறநரில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதேபோன்று, புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வாகனகரம், மதுரவாயல், திருவேற்காடு, பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், மேடவாக்கம், செம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும், சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், திருக்கழுங்குன்றம், மாமல்லபுரம், மதுராந்தகம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | தமிழ்நாட்டை உயர்த்தும் திராவிட மாடல் 2.0 அமையும்: மு.க. ஸ்டாலின்