செய்திகள் :

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

post image

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்ந்துள்ளது.மேலும், காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக உயா்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் வடக்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் பல மாவட்டங்களில் தொடர் மழை மற்றும் மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் ஆக. 16 மாலை நிலவரப்படி, 13 குழந்தைகள், 15-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட மொத்தம் 307 பேர் உயிரிழந்திருப்பதாகவும, பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனிடையே, ஆக. 21 வரை மழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகளுக்குள் வெள்ள நீா் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 74 வீடுகள் சேதமடைந்துள்ளன. இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த பகுதிகளில் மீட்புக் குழுவினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மழைவெள்ள இடா்பாடுகளில் சிக்கி கைபா் பக்துன்கவாவில் 327 பேர், இதில் புனோ் மாவட்டத்தில் 5,340 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், சுமாா் 200-க்கும் மேற்பட்டோா் போ் உயிரிழந்துள்ளனா். 134 பேரை காணவில்லை.159 போ் படுகாயமடைந்துள்ளனா். இதையடுத்து, ஒட்டுமொத்தமாக மழை, வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயா்ந்துள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கை 905-ஆக அதிகரித்துள்ளது. 3,500 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காணாமல் போனவா்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகளில் பாகிஸ்தான் ராணுவத்தைச் சோ்ந்த 2,000 வீரா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பாகிஸ்தானின் அதிபராகப் பதவியேற்கிறாரா ராணுவ தலைமைத் தளபதி?

Flooding in a northwest Pakistani district has killed at least 650 people

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அச்சமில்லை. அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.இதுகுறித்து புதுக்கோட்டையில் ... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 2 மாணவிகள் மீட்பு: ஒருவா் பலி

பாபநாசம்:தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே ஆற்றுக்கு குளிக்க சென்று நீரில் அடித்து செல்லப்பட்ட மூன்று மாணவிகளில்2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனா். ஒரு மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: கிருஷ்ணசாமி

திருச்சி: கவின் ஆணவப் படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்பது தெரியவில்லை. எனவே அந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவ... மேலும் பார்க்க

அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாதித்தார்?: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி

சொந்தக் கட்சியிலேயே தனக்கு ஓர் இடமில்லாமல் வன்மத்தை வைத்துக் கொண்டு தந்தையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அன்புமணியின் அறிக்கை விரக்தியின் உச்சம் என்றும் அன்புமணி நாடாளுமன்றத்திற்குப் போய் என்ன சாத... மேலும் பார்க்க

ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது: பாலு அறிவிப்பு

புதுச்சேரியில் ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்டக் கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல, அதன் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது என அன்புமணி ஆதரவாளர் வழக்குரைஞர் கே.பாலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிர... மேலும் பார்க்க

சின்ன கண்ணன் அழைக்கிறான்..!

மேலும் செய்திகள் மற்றும் படங்களுக்கு... மேலும் பார்க்க