செய்திகள் :

டெல்லி: 65 வயது தாயை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய மகன் - கொடூர சம்பவத்தின் பின்னணி என்ன?

post image

டெல்லியை சேர்ந்த 39 வயது நபர் அவது தாயை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தாயின் முந்தைய கால உறவுக்காக தண்டிக்கும் விதமாக இவ்வாறு செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் கூறியிருப்பதன்படி, 65 வயது மூதாட்டி தனது மகளுடன் (25) ஹௌஸ் காசி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

Stop Abuse

கடந்த ஜூலை 17ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் அவரது கணவர் மற்றும் இளைய மகளுடன் சௌதி அரேபியாவுக்கு பயணம் செய்துள்ளார்.

அப்போது குற்றவாளி (மகன்) அவரது தந்தைக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து, உடனடியாக டெல்லி வரக் கூறியிருக்கிறார். அவரிடம் தாயை விவாகரத்து செய்யுமாறு கூறியதுடன் தனது குழந்தை பருவத்தில் அவருக்கு (தாய்க்கு) இருந்த முறைகேடான உறவு பற்றியும் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 1ம் தேதி இந்தியா திரும்பிய தாயை கடுமையாக தாக்கியிருக்கிறார் மகன். தனது குழந்தைப் பருவத்தை சீரழித்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பாலியல் வன்முறை!

வீட்டிலிருந்து வெளியேறி சில நாட்களுக்கு தனது மூத்த மகளின் வீட்டில் தங்கியிருந்துள்ளார் அந்தப் பெண்.

ஆகஸ்ட் 11ம் தேதி அவர் வீடுதிரும்பிய பின்னரும் வன்முறை தொடர்ந்துள்ளது. அன்று தனியறையில் அவரைப் பாலியல் வன்கொடுமை செய்து, "இது முந்தைய உறவுக்கான தண்டனை" எனக் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 14ம் தேதி மீண்டும் இதேப்போல நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவங்கள் குறித்து மறுநாள் தனது இளைய மகளிடம் முறையிட்டுள்ளார் தாய். மகள் அளித்த தைரியத்தில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பெண்மணி.

வேண்டப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உணவோடு கஞ்சா சட்னி சப்ளை; உத்தரப்பிரதேசத்தில் கடை உரிமையாளர் கைது

உணவில் எத்தனையோ விதமான புதிய வகைகளை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை உரிமையாளர்கள் கவர்வது வழக்கம். ஆனால் உத்தரப்பிரதேசத்தில் ஒரு உணவக உரிமையாளர் வாடிக்கையாளர்களை கவர சாப்பாட்டில் கஞ்சாவைக் கலந்துகொடு... மேலும் பார்க்க

புதுச்சேரி: தடையை மீறி கடலில் குளித்ததால் நேர்ந்த சோகம்; இளம்பெண் உட்பட 3 ஐ.டி ஊழியர்கள் உயிரிழப்பு

79-வது சுதந்திர தின விடுமுறையை தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேர... மேலும் பார்க்க

மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் திருடிய பெண் கைது

குஜராத் மாநிலம் நவ்சாரியைச் சேர்ந்தவர் ஜோதி பனுசாலி (27). இவரது சகோதரி நிஷா மும்பையில் உள்ள வசாய் என்ற இடத்தில் வசித்து வருகிறார். பனுசாலியின் சகோதரி நிஷா தனது வீட்டில் இருந்து வெளியில் சென்று இருந்தா... மேலும் பார்க்க

தர்மஸ்தலா: "என் கையால் 80 உடல்களைப் புதைத்தேன்" - கோயில் முன்னாள் ஊழியர் பரபரப்பு தகவல்

கர்நாடகா மாநிலம், பெல்தங்கடி பகுதியில் அமைந்துள்ள தர்மஸ்தலா என்ற கோவிலில் நூற்றுக்கும் மேலான உடல்கள் கொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டிருக்கும் தகவல் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ரவுடியை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ; இளைஞர் கைது; பின்னணி என்ன?

திண்டுக்கல்லில் பட்டறை சரவணன், அல்லா ஆசிக் ஆகிய 2 ரவுடி கும்பல்களுக்கிடையே மோதல் காரணமாக பட்டறை சரவணன் கொலை செய்யப்பட்டார். அதன் பின்பு பட்டறை சரவணன் கும்பலுக்கும், அல்லா ஆசிக் கும்பலுக்கும் இடையே ஏற்... மேலும் பார்க்க

சென்னை: சிறுமிக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த 5 பேர் - கேரள நடிகை சிக்கிய பின்னணி!

கடநத 2014-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் அந்த கேரள சிறுமி. இவரின் சித்தி மகள் நடிகை மீனு குரியன் (Meenu kuriyan). பள்ளி விடுமுறையிலிருந்த சிறுமியை நடிகை, கேரளாவிலிருந்து சென்னை அண்ண... மேலும் பார்க்க