செய்திகள் :

PMK: 'எனக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும்; ஆனால்...' - ராமதாஸ்

post image

திண்டிவனத்தில் ராமதாஸ் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம், தனது தாய் சரஸ்வதியின் பிறந்தநாளைக் கொண்டாட தைலாபுரம் சென்றிருந்தார் அன்புமணி. அப்போது, அங்கே ராமதாஸையும் சந்தித்து இருந்தார் அன்புமணி.

ஆனால், 'இருவருக்கும் இடையேயும் பேச்சுவார்த்தை நடந்ததா?' என்பது தெரியவில்லை.

இந்த நிலையில், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது...

பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்
பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்

``எங்களுடைய 36 தீர்மானங்கள் ஒரு சமுதாயத்திற்கானது மட்டுமல்ல... அது தமிழ்நாட்டின் அனைத்து சமுகத்திற்கானதும் ஆகும். எப்போதும் எங்களது தீர்மானங்கள் அப்படி தான் இருக்கும்.

தமிழ்நாட்டின் அனைத்து பிரச்னைக்கும் நான் குரல் கொடுத்திருக்கேன். எல்லா மக்களுக்கும் நான் பாடுபட்டு கொண்டிருக்கிறேன்.

அதிமுக ஆட்சியில் 10.5 சதவிகிதம் ஒதுக்கீடு, திமுக ஆட்சியில் பெற்ற 20 விழுக்காடு ஒதுக்கீடு ஆகியவற்றிற்கு எனக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும்.

ஆனால், என்னிடம் வருவதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறீர்கள். நான் உங்களுக்காகவும் தான் போராடி வருகிறேன்.

எந்தக் கூட்டணி?

'எந்தக் கூட்டணி?' என்கிற ஆவல் இருக்கிறது.

கூட்டணி முடிவு எடுக்கும் அதிகாரத்தை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் விரும்புகிறவாறு கூட்டணி சிறப்பாக அமைக்கப்படும்.

பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்
பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்

10.5 சதவிகித ஒதுக்கீடு

10.5 சதவிகித ஒதுக்கீட்டை, இருக்கின்ற தகவல்களை வைத்துக்கொண்டு, ஒரே வாரத்தில் முதலமைச்சரால் கொடுத்துவிட முடியும். ஆனாலும், நீங்கள் மறுக்கிறீர்கள்.

மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும் என்று தட்டிக்கழிக்கிறீர்கள். பிற மாநிலங்களைப் போல, நீங்களும் அந்தக் கணக்கெடுப்பை எடுக்கலாம். அதற்காக நாங்கள் கட்டாயம் போராடாமல் இருக்கமாட்டோம்".

"மலிவான அரசியல் செய்கிறார்; ஆளுநர் இங்கேயே இருக்கட்டும்..!" - முதல்வர் ஸ்டாலின்

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொ... மேலும் பார்க்க

RSS: ``இந்தியாவின் தாலிபன் போன்றது ஆர்.எஸ்.எஸ்" - காங்கிரஸ் மூத்த தலைவர் கடும் விமரசனம்!

இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, ``இந்த அக்டோபரில் விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அதன் நூற்றாண்டு விழ... மேலும் பார்க்க

'வேலை செய்றப்போ சுத்தி சுத்தி வருவாங்க...' - Sanitary Workers Opens Up | Vikatan

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர். ஒரு நாள் முழுவதும் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். ... மேலும் பார்க்க

'தடுத்தார், அபகாரித்தார், கைப்பற்றினார்' - அன்புமணி மீது அடுக்கடுக்கான 16 குற்றச்சாட்டுகள்

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. அதில் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கைக் குழு கொடுத்த அறிக்கை வாசிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ்ஒழுங்கு நடவடிக... மேலும் பார்க்க