செய்திகள் :

ராமநாதபுரம்: ரயில்கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்; இண்டர்லாக் சிஸ்டத்தால் விபத்திலிருந்து தப்பிய ரயில்!

post image
ரயில் கேட்டை மூட சென்ற கோகோ பைலட்

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை மதுரைக்கு பயணிகள் ரயில் புறப்பட்டது. அந்த ரயில் வாலாந்தரவை ரயில் நிலையத்தை கடந்து வழுதூர் - பெரியபட்டிணம் செல்லும் வழியில் அமைந்துள்ள ரயில்வே கேட் அருகே வந்தது. அப்போது ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. இதனால் அந்த பாதையில் சென்ற வாகன ஓட்டிகள் ரயில் கேட் திறந்து இருந்ததால் வழக்கம் போல் ரயில் பாதையை கடக்க முயன்றனர். அந்நேரத்தில் ரயில் ரயில்வே கேட் அருகே மெதுவாக வந்ததை கண்ட வாகன ஓட்டிகள் தண்டவாளத்தினை கடக்காமல் நின்றதுடன், தங்களை தொடர்ந்து வந்த வாகன ஓட்டிகளையும் எச்சரிக்கை செய்து நிறுத்தினர்.

இந்நிலையில் மதுரை சென்ற ரயிலின் லோகோ பைலட் கேட் அருகே ரயிலை நிறுத்தினார். பின்னர் உதவி லோகோ பைலட் ரயில் எஞ்சினில் இருந்து இறங்கி கேட் கீப்பர் அறைக்கு சென்றார். அங்கு வந்த கேட் கீப்பர் ஜெய்சிங் மீனாவிடம் கேட் பூட்டப்படாமல் இருப்பதை கூறியுள்ளார். இதையடுத்து திறந்திருந்த ரயில் கேட் பூட்டப்பட்ட பிறகு அங்கிருந்து ரயில் மீண்டும் புறப்பட்டது.

ரயில் வந்ததால் நிறுத்தப்பட்ட வாகனங்கள்

விபத்து தவிர்க்கப்பட்டது எப்படி?

பொதுவாக ரயில்பாதைகளில் உள்ள கேட்களில் இண்டர்லாக் சிஸ்டம் மற்றும் நான் இண்டர் லாக் சிஸ்டம் என இரண்டு சிக்னல் முறைகள் பயன்பாட்டில் உள்ளது. இதன்படி இண்டர்லாக் முறையிலான கேட்டிற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு முன் ஒரு சிக்னல் நிறுவப்பட்டிருக்கும். ரயில் ஏதும் செல்லாத போது இந்த சிக்னலில் மஞ்சள் விளக்கு எரியும். அடுத்து வரும் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால் பச்சை விளக்கும், கேட் மூடப்படாமல் இருந்தால் சிவப்பு விளக்கும் எரியும்.

இதனை கவனிக்கும் லோகோ பைலட் ரயிலின் வேகத்தை குறைத்து இயக்குவதுடன், கேட் மூடப்படாமல் இருப்பதை அறிவிக்க சைரனை ஒலிக்க செய்ய வேண்டும். இதன் பின்னரும் கேட் மூடப்படவில்லை எனில் வேகம் குறைக்கப்பட்ட ரயிலை, கேட்டிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே நிறுத்திவிட்டு உதவி லோகோ பைலட்டை அனுப்பி கேட்டினை மூட வேண்டும். இதன் பின் அந்த ரயில் ரயில்வே கேட்டை கடந்து சற்று தூரத்தில் ரயிலை நிறுத்திவிட்டு ரயிலில் உள்ள கார்டு கிழிறங்கி மூடப்பட்ட கேட்டினை திறந்த பின் அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டும்.

கேட் கீப்பர் ஜெய்சிங் மீனா

இரண்டாவது முறையான நான் இண்டர்லாக் சிஸ்டத்தில் இத்தகைய சிக்னல் முறைகளே இருக்காது. இத்தகைய ரயில்வே கேட்கள் மூடப்படாத நிலையில், சமீபத்தில் கடலூர் அருகே நடந்த பள்ளி வேன் மீது ரயில் மோதியது போன்ற பெரும் விபத்துகள் ஏற்படும் சூழல் ஏற்படும். நல்வாய்ப்பாக பெருங்குளம் - வழுதூர் இடையிலான ரயில்வே கேட் இண்டர்லாக் சிஸ்டத்தில் இணைக்கப்பட்டிருந்ததால் நேற்றைய தினம் அங்கு ரயில் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் பணி நேரத்தில் ரயில்வே கேட்டினை மூடாமல் அஜாக்கிரதையாக இருந்த கேட் கீப்பர் ஜெய்சிங் மீனாவிடம் மண்டபம் ரயில் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்திலும் அதிகாரிகள் இவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்: டூவீலர் மீது கார் மோதி விபத்து - தந்தை, மகள் உட்பட 3 பேர் பலியான சோகம்!

தஞ்சாவூர் அருகே உள்ள வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் அறிவழகன்(37). இவரது மனைவி உஷா(35). இவர்களின் மகள்கள் ரூபா(10), பாவ்யாஸ்ரீ(9). அறிவழகனின் சகோதரி மகள் தேஜாஸ்ரீ(4). அறிவழகன் தன் மனைவி உட்பட ... மேலும் பார்க்க

`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்பட்ட பெண் நெகிழ்ச்சி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை பகுதியைச் சேர்ந்த திலீப் என்பவர் மனைவி யமுனா (வயது 54). பெட்டிக்கடையில் வைத்து லட்டரி சீட்டு மற்றும் வெற்றிலை வியாபாரம் செய்துவந்தார். வீட்டில் உள்ளவர்களுக்க... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: யாரும் உதவ முன்வராத விரக்தி; இறந்த மனைவியின் உடலை பைக்கில் கட்டி எடுத்துச்சென்ற கணவர்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகில் நடந்த விபத்தில் கியார்சி அமித் என்ற பெண் இறந்துபோனார். நாக்பூர் மற்றும் ஜபல்பூர் சாலையில் கியார்சியும் அவரது கணவர் அமித்தும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்... மேலும் பார்க்க

'ரத்தன் டாடா மட்டும் இருந்திருந்தால்.!' - இழப்பீடு தாமதமாவது குறித்து அமெரிக்க வழக்கறிஞர்

கடந்த ஜூன் 12-ம் தேதி, குஜராத்தில் இருந்து இங்கிலாந்து கிளம்பி சென்ற ஏர் இந்திய விமானம் விபத்துகுள்ளாகியது.இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக, 'தி AI-171 நி... மேலும் பார்க்க

Air India: MP-கள் பயணித்த விமானத்தில் தொழிற்நுட்பக் கோளாறு; `அதிஷ்டத்தால் தப்பினோம்' - வேணுகோபால்

இந்திய அரசின் Air Corporations Act மூலம் தேசியமயமாக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம், அதிக நட்டம் காரணமாக 2022 பிப்ரவரி மாதம் ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் தனியார்மயமாக்கி, டாடா சன்ஸ் குரூப்புக்கு விற்ற... மேலும் பார்க்க

சீனா: பயணியுடன் பள்ளத்தில் விழுந்த கார்; `ரோடோ டாக்ஸி சேவை' பாதுகாப்பானதா? - எழும் கேள்விகள்

தென்மேற்கு சீனாவில் பாய்டு நிறுவனத்தின் தானியங்கி அப்பல்லோ கோ 'ரோபோ டாக்ஸி' சேவையில் பயணம் செய்த ஒருவர் படுகுழிக்குள் விழுந்துள்ளார். சோங்கிங் என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில், குழிக்குள் விழுந்த ப... மேலும் பார்க்க