செய்திகள் :

ட்ரம்ப் சந்திப்பு: 'நீண்ட நாள்களுக்குப் பிறகு, நம்முடைய...' - ரஷ்யாவில் புதின்!

post image

அமெரிக்கா அலாஸ்காவில் பேச்சுவார்த்தை முடிந்த சில முடிந்த சில மணிநேரங்களிலேயே ரஷ்யா கிளம்பிவிட்டார் ரஷ்ய அதிபர் புதின்.

ரஷ்யாவில் புதின்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து ரஷ்யாவில் பேசியிருக்கிறார் புதின்.

"நீண்ட காலமாக, நாம் இந்த மாதிரியான நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. ஆனால், இப்போது நமது நிலைப்பாட்டை அமைதியாகவும், விளக்கமாகவும் முன்வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

புதின் - ட்ரம்ப்
புதின் - ட்ரம்ப்

இந்தப் பேச்சுவார்த்தை வெளிப்படையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. என்னைப் பொறுத்தவரை, இந்தப் பேச்சுவார்த்தை தேவையான முடிவுகளை எடுப்பதற்கான வழிகளை வகுத்துள்ளது.

மேலும், இது தகுந்த நேரத்தில் நடந்தது மற்றும் பயனுள்ளதாகவும் இருந்தது" என்று ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தை குறித்து அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

புதின் நிலைப்பாடு

2022-ம் ஆண்டு ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, புதின் நேரடியாக பெரியளவில் உலக தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இப்படி நடப்பது இதுவே முதல் முறை.

ட்ரம்ப் - புதின் பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், இது அதற்கான ஆரம்பப்புள்ளி என்று நம்பப்படுகிறது.

மேலும், பேச்சுவார்த்தையில், தானும் உக்ரைன் உடனான போரை நிறுத்துவதில் விருப்பமாக உள்ளதாக புதின் தெரிவித்திருக்கிறார்.

``நானும் மலம் அள்ளுவேன், உனக்காக அல்ல.. எனக்காக" - திருமா பிறந்தநாள் விழாவில் எம்.பி கமல்ஹாசனின் உரை

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 63-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மதச்சார்பின்மையைக் காப்போம் என்ற சிறப்பு நிகழ்வு ஒன்று ... மேலும் பார்க்க

போன வாரம் 'அன்புமணி'; இந்த வாரம் 'ராமதாஸ்' - யார் பாமக தலைவர்?; பொதுக்குழு தீர்மானங்கள்!

திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல், பாமகவில் அன்புமணி, ராமதாஸ் இடையில் முட்டல், மோதல்போக்கு தொடர்ந்து வருகிறது. அது... மேலும் பார்க்க

PMK: ராமதாஸ் தலைமையில் சிறப்புப் பொதுக்குழு; 'நோ' அன்புமணி; காந்திமதி பிரசன்ட் - என்ன நடக்கிறது?

இன்று திண்டிவனத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாநில சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. கடந்த வாரம், பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லாபுரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்... மேலும் பார்க்க

வாக்காளர் அதிகார யாத்திரை: பீகார் SIR-ஐ எதிர்த்து ராகுல் காந்தி தொடங்கும் நடைப்பயணம்!

இந்த ஆண்டின் இறுதியில் பீகார் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, பீகாரில் நடத்தப்பட்ட சிறப்புத் தீவிர திருத்தத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. இதில் பல வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கிறா... மேலும் பார்க்க

Putin: 3 மணி நேர பேச்சுவார்த்தை: புதினின் நிபந்தனையை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப்! - போர் முடிவுக்கு வருமா?

2022-ம் ஆண்டு முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போரில் உக்ரைனின் 22 சதவிகித பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியிருக்கிறது. இதற்கிடையில், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் நடந்தது. அதிபராக பதவியேற்ற டொனால்ட் ... மேலும் பார்க்க