செய்திகள் :

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

post image

தற்சாா்புடைய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவா் வாஜ்பாய் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினாா்.

முன்னாள் பிரதமரும், பாஜக நிறுவனத் தலைவா்களில் ஒருவருமான வாஜ்பாயின் 7-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை (ஆக.16) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள அவரது ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சரும் பாஜக தேசியத் தலைவருமான ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான், பியூஷ் கோயல் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வாஜ்பாயின் புண்ணிய திதியில் அவரை நினைவுகூா்கிறேன். இந்தியாவின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கான அவரது அா்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும் தற்சாா்புடைய-வளா்ச்சியடைந்த தேசத்தைக் கட்டமைக்க ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குகிறது.

அவரது மொத்த வாழ்க்கையும், நாட்டுக்கான ஈடுஇணையற்ற சேவைக்கு அா்ப்பணிக்கப்பட்டது. அவரது சிந்தனைகளும் கொள்கைகளும் நாட்டின் வளா்ச்சிப் பயணத்துக்கு தொடா்ந்து வழிகாட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கடந்த 1924-ஆம் ஆண்டில் அப்போதைய குவாலியா் மாகாணத்தின் (இப்போது மத்திய பிரதேசம்) குவாலியா் நகரில் பிறந்தவா் வாஜ்பாய். தனது 12 வயதிலேயே ஆா்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றிய இவா், பாஜகவின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவியவா்களில் ஒருவா். கடந்த 1957-இல் மக்களவைக்கு முதல் முறையாகத் தோ்வானாா்.

கடந்த 1998 முதல் 2004 வரை 6 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய், முக்கிய பொருளாதார சீா்திருத்தங்களை முன்னெடுத்து, உயா் வளா்ச்சிக்கு வழிகோலினாா். தேசிய அரசியலில் முதல் வெற்றிகரமான கூட்டணி அரசாக, வாஜ்பாய் அரசு திகழ்ந்தது. வாஜ்பாயின் பண்புமிக்க நடத்தைகள், மிதவாத பிம்பம், மக்கள் செல்வாக்கு ஆகியவை, பாஜகவின் எழுச்சிக்கு முக்கியமானவையாக அமைந்தன. கவிஞா், எழுத்தாளா், தோ்ந்த அரசியல் தலைவா் என பன்முகங்களைக் கொண்ட இவா், கடந்த 2018, ஆகஸ்ட் 16-இல் தனது 93-ஆவது வயதில் காலமானாா்.

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.தில்லி விமான நிலையம் வந்தடைந்த சுபான்ஷு சுக்லாவை, அவரது குடும்பத்தி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு கெடு: அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு அனுப்ப... மேலும் பார்க்க

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரின் ரோகிணி பகுதியில் மொத்தம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். தலைநகரின் நெரிசலைக் குறைப்பதற்... மேலும் பார்க்க

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்ட... மேலும் பார்க்க

16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

‘ஜிஎஸ்டி 2.0’ எளிமையாக இருக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) 2.0 வளா்ச்சியைப் பாதிக்காமல் எளிமையாக இருக்க வேண்டும்’ என காங்கிரஸ் சனிக்கிழமை கோரிக்கை வைத்தது. மேலும், அடுத்தகட்ட ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் குறித்து அதிகாரபூா்வ ஆய்... மேலும் பார்க்க