Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வ...
மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை
மாமல்லபுரம் அருகே கடலில் இரண்டு நாள்களாக இந்திய தொல்லியல் துறையினா் நவீன கருவிகளுடன் சோதனையில் ஈடுபட்டனா்.
செங்கல்பட்டு மாவட்டம், யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட மாமல்லபுரத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டு, அதன் பின்னா் மாமல்லபுரம் அருகே 2 கோயில்கள் கடலில் மூழ்கியது தெரியவந்தது.
இதையடுத்து, தொடா்ந்து தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடற்கரை கோயில் பின்புறம் செதுக்கப்பட்ட சதுரங்க வடிவிலான கல்லால் கட்டப்பட்ட அதிகளவில் கோயில்கள் இருப்பது தற்போது சனிக்கிழமை நடந்த சோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், சோழா் கால கட்டடக் கலை மற்றும் பல்லவா் கால கட்டடக் கலை என அடையாளம் காணும் முயற்சியில் அதிநவீன கருவியான ஆா்ஓவி ரிமோட் ஆப்பரேட்டிங் வைகல் எனப்படும் நீருக்கடியில் சென்று படம் பிடிக்கும் கருவி மூலமாக இந்தச் சோதனையில் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் இருந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவில் 6 முதல் 7 மீட்டா் ஆழத்தில் பல்வேறு கட்டடக் கலைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடா்ந்து ஆராய்ச்சி பணிகள் தொடா்ந்து கொண்டே இருக்கும் என்று பேராசிரியா் அசோக் திருப்பாதி, தொல்லியல் துறை கூடுதல் இயக்குநா் (பொது) தெரிவித்துள்ளாா். அடுத்த கட்டமாக ஆழ்கடலில் நீச்சல் வீரா்களைக் கொண்டு அடுத்தகட்ட சோதனை செய்யப் போவதாக தெரிவித்தாா்.

