Doctor Vikatan: தவிர்க்க முடியாத பகல் தூக்கம், இரவில் தூக்கமின்மை; பேலன்ஸ் செய்வ...
கிருங்காக்கோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காக்கோட்டையில் கோயில் திருவிழாவையொட்டி இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டையில் சடையாண்டி சுவாமி கோயிலில் ஆடி வெள்ளி பூஜையையொட்டி 5-ஆம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் இரு பிரிவுகளாக நடைபெற்றது.
இதில், பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்தில் 8 இணை மாடுகளும், சின்ன மாட்டு வண்டிப் பந்தயத்தில் 10 இணைகளும் பங்கேற்றன.
பெரிய மாட்டுக்கு போட்டி எல்லையாக 8 கி.மீ. தொலைவும், சின்ன மாட்டுக்கு போட்டி எல்லையாக 6 கி.மீ. தொலைவும் நிா்ணயிக்கப்பட்டது. இந்தப் பந்தயத்தில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த மாடுகள் பங்கேற்றன.
பிரான்மலை - சிங்கம்புணரி நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை சாலையில் இருபுறமும் நின்று ஏராளமான பொதுமக்கள் பாா்த்து ரசித்தனா். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்கள், சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.