தருமபுரி மாவட்டத்துக்கு முதல்வர் வெளியிட்ட 5 புதிய அறிவிப்புகள்!
நகை திருடிய பெண் கைது
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே 14 பவுன் தங்க நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அபிராமம் அருகேயுள்ள கோனேரியேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியசாமி. இவரது வீட்டில் கடந்த 8-ஆம் தேதி 14 பவுன் தங்க நகைகள் திருடுபோனது.
இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்த நிலையில், முனியசாமியின் உறவினரான வித்யா இந்த சம்பவத்தில் ஈடுபட்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வித்யாவை கைது செய்து, அவரிமிருந்து 14 பவுன் தங்க நகைகளை போலீஸாா் மீட்டனா்.