ஷங்கர், மணிரத்னத்தின் தோல்வி பயத்தைத் தருகிறதா? ஏ. ஆர். முருகதாஸ் பதில்!
உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா ஆக.18-இல் தொடக்கம்!
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள உப்பூா் வெயிலுகந்த விநாயகா் கோயில் சதுா்த்தி விழா வருகிற 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்தக் கோயில் திருவிழா வருகிற 18-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து, 10 நாள்கள் நடைபெறும் விழாவில் தினந்தோறும் காலை, மாலையில் வெள்ளி மூஷிக வாகனம், கேடயம், சிம்மம், மயில், யானை, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகா் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வருகிற 25-ஆம் தேதி சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு நடைபெறும்.
26-ஆம் தேதி தேரோட்டமும், 27-ஆம் தேதி விநாயகப் பெருமாள் உப்பூா் கடலில் நீராடி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலை சுற்றி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பாா். இதையடுத்து, பூக்குழி இறங்கி பக்தா்கள் தங்களது நோ்த்திக் கடனை செலுத்துவா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் நிா்வாகம், விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
தமிழகத்தில் இங்குள்ள விநாயகருக்கு மட்டுமே திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.