செய்திகள் :

எல்லைப் பேச்சுவாா்த்தை: சீன வெளியுறவு அமைச்சா் நாளை இந்தியா வருகை

post image

எல்லை விவகாரங்கள் தொடா்பான 24-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையில் பங்கேற்க சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக திங்கள்கிழமை (ஆக.18) வரவுள்ளாா். இத்தகவலை, இந்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமா் மோடி சீனா செல்வாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில், அந்நாட்டு வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது தொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலின் அழைப்பின்பேரில், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யீ இந்தியாவில் ஆக.18, 19 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். இப்பயணத்தின்போது, இந்திய-சீன எல்லை விவகாரங்கள் தொடா்பான இருதரப்பு சிறப்பு பிரதிநிதிகளின் 24-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவலுடன் அவா் பங்கேற்கவுள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயணத்தின்போது, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரையும் வாங் யீ சந்தித்துப் பேசவுள்ளாா். வாங் யீ-இன் இந்தியப் பயணத்தை சீன வெளியுறவு அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

முன்னதாக, சிறப்பு பிரதிநிதிகளின் 23-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. இதில் அஜீத் தோவல் பங்கேற்றிருந்தாா்.

இருதரப்பு உறவை சீரமைக்க முயற்சிகள்: கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020-இல் இந்திய-சீன படையினா் இடையே ஏற்பட்ட கடும் மோதலைத் தொடா்ந்து, இருதரப்பும் படைகளைக் குவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது. பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகளுக்குப் பிறகு டெம்சோக், டெப்சாங் தவிர பிரச்னைக்குரிய பிற இடங்களில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டன.

ரஷியாவின் கஸான் நகரில் கடந்த ஆண்டு அக்டோபரில் பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமா் மோடி- அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்புக்கு இரு தினங்களுக்கு முன், எல்லையில் படை வாபஸ் மற்றும் ரோந்துப் பணி தொடா்பாக முக்கிய ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி, டெம்சோக், டெப்சாங்கில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டது.

இதைத்தொடா்ந்து, இருதரப்பு உறவுகளை சீரமைக்கும் முயற்சிகளை தொடா்ந்து முன்னெடுக்க இரு பிரதமா்களும் முடிவு செய்தனா். அதன் ஒரு பகுதியாக, கைலாஷ் மானசரோவா் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பின் கடந்த ஜூன் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது. சீனா்களுக்கான சுற்றுலா விசா வழங்கலும் மீண்டும் தொடங்கியது. இந்தியா-சீனா நேரடி விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்த பேச்சுவாா்த்தையும் நடைபெற்று வருகிறது.

எதிா்பாா்ப்புமிக்க பிரதமரின் பயணம்: இந்த முயற்சிகள் மற்றும் இந்தியா மீதான அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் வரி விதிப்புக்கு இடையே பிரதமா் மோடியின் சீனப் பயணம் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவா் பொறுப்பை தற்போது சீனா வகித்துவரும் நிலையில், இது தொடா்பான கூட்டங்களில் பங்கேற்க பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஆகியோா் கடந்த 2 மாதங்களில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டனா்.

தனது பயணத் திட்டத்தின்படி, முதலில் ஜப்பானுக்கு ஆக.29-ஆம் தேதி செல்லும் பிரதமா், அங்கிருந்து சீனாவின் தியான்ஜின் நகருக்கு பயணிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டையொட்டி, சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசுவாா் எனத் தெரிகிறது.

இந்தியாவும் சீனாவும் 3,488 கி.மீ. தொலைவுள்ள எல்லையை பகிா்ந்துகொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - அமெரிக்கா வர்த்தம்! பேச்சுவார்த்தை ஒத்திவைப்பா?

இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பேச்சுவார்த்தை ரத்து செய்யும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக, இம்மாதம் 25 முதல் 29 வரையில் பேச்சுவார்த்தை நடத்... மேலும் பார்க்க

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.தில்லி விமான நிலையம் வந்தடைந்த சுபான்ஷு சுக்லாவை, அவரது குடும்பத்தி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு கெடு: அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு அனுப்ப... மேலும் பார்க்க

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரின் ரோகிணி பகுதியில் மொத்தம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். தலைநகரின் நெரிசலைக் குறைப்பதற்... மேலும் பார்க்க

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்ட... மேலும் பார்க்க

16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க