செய்திகள் :

`வயதாகிவிட்டதே எப்போது ஓய்வு?' to `ஓய்வில் என்ன செய்வீர்கள்?'- ஷாருக் கானின் ஷார்ப் பதில்கள்!

post image

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஷாருக் கான் 'ஜவான்' திரைப்படத்திற்காக வென்றுள்ளார். தனது 33 வருட சினிமா கெரியரில் ஷாருக் கான் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருக்கு முதல் தேசிய விருதை பெற்று தந்துள்ளது. அதே நேரம் இந்த விருது அறிவிப்பு பல்வேறு திரைத்துறையினரின் விமர்சனத்துக்கும் ஆளானது.

இந்த நிலையில், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஷாருக் கான் தன் எக்ஸ் பக்கத்தில், ``வெளியே மழை பெய்துகொண்டிருப்பதைப் பார்த்தேன்... அதனால் இந்த இனிமையான சூழலை உங்களுடன் செலவிட விரும்புகிறேன். அடுத்த அரை மணி நேரத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. உங்களுக்கு நேரம் இருந்தால் #AskSRK கேள்வி கேட்கலாம்." என்றார். அதைத் தொடர்ந்து ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார்.

ஒரு பயனர், ``உங்களுக்கு வயதாகிவிட்டதே... மற்ற இளம் நடிகர்களுக்கு வழிவிட்டு நீங்கள் ஓய்வெடுக்கலாமே. எப்போது ஓய்வெடுப்பீர்கள்?" என்றார். அதற்கு ஷாருக் கான், ``சகோதரரே, உங்கள் கேள்விகள்ல இருக்கும் குழந்தைத் தனத்தை மாற்றி கொஞ்சம் முதிர்ச்சியான கேள்வி கேட்க முடிந்தால் கேளுங்கள். அதுவரை நீங்கள் ஓய்வு பெறுவதுதான் நல்லது." என்றார்.

ஒரு ரசிகர், ``தேசிய விருதை வென்ற பிறகு நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஷாருக் கான்,``ஆமாம்! நான் தேசத்தின் ராஜாவைப் போல உணர்கிறேன்!!! இன்னும் சிறப்பாக செயல்படவும், கடினமாக உழைக்கவும் உத்வேகப்படுத்துகிறது. பொறுப்பும், மரியாதையும் கூடியிருக்கிறது" என்றார்.

ஷாருக் கான்
ஷாருக் கான்

இன்னொரு ரசிகரின் ``உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்கு என்ன?" என்றக் கேள்விக்கு ஷாருக்கான், ``பொழுதுபோக்குக்கான நேரமே இல்லை. பிசியாக மட்டுமே இருக்கிறேன். இடையிடையே கொஞ்சம் புத்தகம் வாசிக்கிறேன். படபிடிப்புக்கான டைலாக்கை ஒத்திகை பார்ப்பேன். வாய்ப்பு கிடைக்கும்போது நன்றாக தூங்குவேன்." என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Dating Apps: "ஆண்கள் வேட்டைக்காரர்கள்; பெண்களைக் கர்ப்பமாக்கிவிட்டு ஓடிவிடுவர்" - கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது பா.ஜ.க சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக இருக்கிறார். ஆனால் எம்.பி., வாழ்க்கை இந்த அளவுக்கு அதிக வேலையுடையதாக இருக்கும் என்று தான் நினைக்கவில்லை எ... மேலும் பார்க்க

Shilpa Shetty: "மதகுரு பிரேமானந்த்திற்கு சிறுநீரகத்தைத் தானம் தர விருப்பம்" - ஷில்பா ஷெட்டி கணவர்

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும், உத்தரப்பிரதேத்தில் இருக்கும் விருந்தாவனில் ஆன்மீக மதகுரு பிரேமானந்த் மகாராஜைச் சந்தித்துத் தரிசித்தனர்.இந்தச் சந்திப்பின்போது ஆன்மீக மத... மேலும் பார்க்க

Sameera Reddy: `13 ஆண்டுகளுக்குப் பிறகு' - மீண்டும் நடிக்க வந்தது குறித்து சமீரா ரெட்டி

பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு நடிப்பிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் சமீரா ரெட்டி தற்போது மீண்டும் நடிப்புக்க... மேலும் பார்க்க

`தென்னிந்தியர்களை பாலிவுட் ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் இருந்தது!’ - ஜூனியர் என்.டி.ஆர்

பாலிவுட்டுக்கு தென்னிந்திய சினிமாவை சேர்ந்த இயக்குநர்களும், நடிகர்களும் வருவது சமீப காலமாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் பாலிவுட்டில் எந்த ஒரு தென்னிந்திய இயக்குநர் அல்லது நடிகரால் நிலைத்து நிற்க முடிவ... மேலும் பார்க்க

SRK: "ஷாருக்கான் என் காலேஜ் சீனியர்; ஆனாலும், அவருடைய அம்மாவாக நடித்தேன்" - நடிகை ஷீபா சத்தா

'பதாய் ஹோ', 'பதாய் டு' உட்படப் பல பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகை ஷீபா சத்தா.இதைத் தாண்டி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் அம்மா கதாபாத்திரங்களாகவும் இவர் நடித்திருக்கிறார்.இவர் 'ரயீஸ்', 'ஜீரோ' ஆகி... மேலும் பார்க்க

மீண்டும் சீரியல்; வைரலாகும் சம்பளம் விவரம்; "அதிக சம்பளத்திற்குக் காரணம் இருக்கு" - ஸ்மிருதி இரானி

முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கிறார். அந்தத் தொடருக்காக அவர் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.டி.வி... மேலும் பார்க்க