செய்திகள் :

இணைய வழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டம்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

post image

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் கூட்டுறவுத் துறையின் சார்பில் விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 17) தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தருமபுரி, நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சியில் அமைந்துள்ள பிஎம்பி கல்லூரி அருகில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

இதில் ரூ. 512.52 கோடி மதிப்பில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 362.77 கோடியில் முடிவுற்ற 1,073 திட்டப் பணிகளை திறந்து வைக்கிறார்.

மேலும், பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ. 830.06 கோடியில் 70,427 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றுகிறார்.

சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற முதல்வர், சனிக்கிழமை இரவு தருமபுரியை வந்தடைந்தார்.

இதைத் தொடர்ந்து, நல்லம்பள்ளியை அடுத்த அதியமான்கோட்டையில் இருந்து தேவரசம்பட்டி, எர்ரப்பட்டி, ஒட்டப்பட்டி, பழைய குடியிருப்புப் பகுதி, அரசு கலைக் கல்லூரி வழியாக ‘ரோடு ஷோ’’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதையும் படிக்க: விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாள்! முதல்வர் வாழ்த்து!

Chief Minister Stalin launched the online crop loan scheme.

தூய்மைப் பணியாளர் போராட்டம்! பணிநிரந்தரம் கூடாது என்பதுதான் சரி!

விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாள் விழாவில் தூய்மைப் பணியாளர் போராட்டம் குறித்து அவர் பேசினார்.தனது பிறந்தநாள் விழாவின்போது தொல்.திருமாவளவன் பேசுகையில்,திருமாவளவன் ஏன் அரசை எதிர்த்துப் போராடவில்லை?... மேலும் பார்க்க

கூலி படத்திற்கு குழந்தைகளுக்கு அனுமதி மறுப்பு: வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்!

கோவை உள்ள திரையரங்கத்தில், கூலி படம் பார்க்க சென்ற குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.ரஜினி நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் கூல... மேலும் பார்க்க

ராமதாஸ் தலைமையில் தொடங்கிய பாமக பொதுக்குழு! கூட்டணி அறிவிப்பு வெளியாகுமா?

பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பட்டானூரில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்தப் பொதுக்க... மேலும் பார்க்க

மூடப்படாத ரயில்வே கடவுப் பாதை! கேட் கீப்பர் பணியிடை நீக்கம்!

வாலாந்தரவை ரயில்வே கேட் கீப்பர் ஜெயசிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.சென்னை - ராமேசுவரம் விரைவு ரயில், வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே வந்தபோது, ரயில் கடவுப் பாதையின் தடுப்புக் கதவு மூடப்படாமல் இருந்... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ. 512 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வர் தொடக்கி வைத்தார்!

தருமபுரியில் நடக்கும் அரசு விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், ரூ.512.52 கோடி மதிப்பிலான 1,044 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.இதனைத் தொடர்ந்து ரூ.362.77 கோடி மதிப்பில் 1,073 முடிவுற்ற திட்டங்க... மேலும் பார்க்க

பணியின்போது மாரடைப்பால் நடத்துநர் பலி!

திருவெற்றியூர் மாநகரப் பேருந்து நடத்துநர் பணியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ராஜா கடையை சேர்ந்தவர் ரமேஷ் - வயது (54). சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் ... மேலும் பார்க்க