செய்திகள் :

Shilpa Shetty: "மதகுரு பிரேமானந்த்திற்கு சிறுநீரகத்தைத் தானம் தர விருப்பம்" - ஷில்பா ஷெட்டி கணவர்

post image

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும், உத்தரப்பிரதேத்தில் இருக்கும் விருந்தாவனில் ஆன்மீக மதகுரு பிரேமானந்த் மகாராஜைச் சந்தித்துத் தரிசித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது ஆன்மீக மதகுருவிடம் இருவரும் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தனக்கு இரண்டு சிறுநீரகமும் பழுதாகிவிட்டதாகவும், அதோடுதான் 10 ஆண்டுகளாக வாழ்வதாக இருவரிடமும் பிரேமானந்த் மகாராஜ் தெரிவித்தார்.

அதற்கு ராஜ் குந்த்ரா, 'நான் உங்களைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பின்பற்றுகிறேன். உங்களது வீடியோ எனது அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுப்பதாக இருப்பதால் உங்களிடம் கேள்வி கேட்க எனக்கு எதுவும் இல்லை' என்று தெரிவித்தார்.

அதோடு, 'உங்களது உடல்நிலை எனக்குத் தெரியும். என்னால் உதவ முடியும் என்றால் எனது ஒரு சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்' என்று ராஜ் குந்த்ரா தெரிவித்தார்.

ராஜ் குந்த்ராவின் இந்தப் பேச்சைக் கேட்டு ஷில்பா ஷெட்டி ஆச்சரியம் அடைந்தார். ராஜ் குந்த்ராவின் பேச்சைக் கேட்ட பிரேமானந்த் மகாராஜ், 'எனக்கு இதுவே போதும். நீ ஆரோக்கியத்துடன் இரு. இறைவனிடமிருந்து அழைப்பு வராமல் நான் இந்தச் சிறுநீரக பிரச்னையால் இந்த உலகத்தை விட்டுச் செல்லமாட்டேன். ஆனால் உங்களது வேண்டுகோளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா மீது ரூ.60 கோடி மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் பிரேமானந்த் மகாராஜாவை வந்து தரிசனம் செய்துள்ளனர். ஏற்கனவே ராஜ் குந்த்ரா மீது ஆபாச வீடியோ தயாரித்து ஒ.டி.டி தளத்தில் வெளியிட்டதாகக் கைது செய்யப்பட்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Sameera Reddy: `13 ஆண்டுகளுக்குப் பிறகு' - மீண்டும் நடிக்க வந்தது குறித்து சமீரா ரெட்டி

பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி திருமணமாகி குழந்தைகள் பிறந்த பிறகு நடிப்பிலிருந்து விலகியிருக்கிறார். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் சமீரா ரெட்டி தற்போது மீண்டும் நடிப்புக்க... மேலும் பார்க்க

`தென்னிந்தியர்களை பாலிவுட் ஏற்றுக்கொள்ளுமா என்ற சந்தேகம் இருந்தது!’ - ஜூனியர் என்.டி.ஆர்

பாலிவுட்டுக்கு தென்னிந்திய சினிமாவை சேர்ந்த இயக்குநர்களும், நடிகர்களும் வருவது சமீப காலமாக அதிகரித்து இருக்கிறது. ஆனால் பாலிவுட்டில் எந்த ஒரு தென்னிந்திய இயக்குநர் அல்லது நடிகரால் நிலைத்து நிற்க முடிவ... மேலும் பார்க்க

SRK: "ஷாருக்கான் என் காலேஜ் சீனியர்; ஆனாலும், அவருடைய அம்மாவாக நடித்தேன்" - நடிகை ஷீபா சத்தா

'பதாய் ஹோ', 'பதாய் டு' உட்படப் பல பாலிவுட் படங்களில் நடித்தவர் நடிகை ஷீபா சத்தா.இதைத் தாண்டி பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் அம்மா கதாபாத்திரங்களாகவும் இவர் நடித்திருக்கிறார்.இவர் 'ரயீஸ்', 'ஜீரோ' ஆகி... மேலும் பார்க்க

மீண்டும் சீரியல்; வைரலாகும் சம்பளம் விவரம்; "அதிக சம்பளத்திற்குக் காரணம் இருக்கு" - ஸ்மிருதி இரானி

முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீரியலில் நடிக்கிறார். அந்தத் தொடருக்காக அவர் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.டி.வி... மேலும் பார்க்க

Kajol: `அதையே மீண்டும் ஏன் இந்தியில் பேச வேண்டும்?'- மராத்தி விழாவில் நடிகை கஜோல்

மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகள்-2025 விழா மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை கஜோல் கலந்துகொண்டார். இந்திய சினிமாவுக்கு நடிகை கஜோல் செய்த பங்களிப்புக்காக மதிப்புமிக்க ராஜ் கபூர் ... மேலும் பார்க்க

Deepika Padukone: வைரலான விளம்பர ரீல்; ஹர்திக் பாண்டியாவை முந்திய தீபிகா படுகோன்!

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்கள் ஏராளம். ஆனால், சில வீடியோக்கள் மட்டுமே மக்களின் மனங்களில் தனி இடம் பிடிக்கின்றன. அந்த வகையில், நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகி... மேலும் பார்க்க