செய்திகள் :

விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் புதிய முயற்சி

post image

நம் ஊர்களில் நடக்கும் திருவிழா, பண்டிகைகளின் போது வீட்டின் முன் போடும் கோலங்களின் மேல் சாணியை உருண்டையாக்கி அதைக் கோலத்தின் மீது வைத்து விநாயகராக வழிபடும் பழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது.

ஏறத்தாழ எல்லோருக்கும் எளிதாகச் செய்யக் கூடிய விநாயகர் என்றால் சாணியிலிருந்து தயாரிப்பதுதான். அந்த ஐடியாவை வைத்தே தற்போது விநாயகரின் முழு உருவத்தையும் சாணியிலேயே செய்து சிலைகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ரேவதி.

சாணியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்
சாணியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்

விநாயகர் சிலைகள் இரசாயன கலவைகளால் செய்யப்படும் நிலையில் இயற்கையாக முறையில் நாம் இதுவரை செய்து வந்த பழக்கத்தை அப்படியே பின்பற்றுவதோடு, அதில் ஒரு புதுமையைப் புகுத்தி தன்னுடைய படைப்பாற்றலால் அழகான விநாயகர் சிலைகளைச் செய்து வருகிறார்.

இது குறித்து ரேவதியிடம் பேசும்போது, “திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருக்கிற நாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கிறேன். சொந்தமாக விவசாயம் செய்கிறோம். அதோடு மண்புழு உரத்தைச் சொந்தமாகத் தயாரித்து வருகிறோம். சொந்தமாக மாடுகள் வைத்து இருக்கிறோம். மாடுகள் போடும் சாணியை எடுத்து மண்புழு உரம் தயாரித்து வருகிறோம்.

சாணியில் வேறு என்ன மதிப்புக் கூட்டுப் பொருள்கள் செய்யலாம் என்று யோசித்து சாணியிலேயே விநாயகர் செய்து வருகிறேன். ரசாயன கலவைகளை வைத்து விநாயகர் செய்யும் போது நாம் ஏன் இயற்கை முறையில் இந்த மாதிரியான விநாயகரைச் செய்யக் கூடாது? என்று என்னை நானே கேட்டுச் செய்யத் தொடங்கியதுதான் இந்த விநாயகர் சிலைகள்.

மாட்டிலிருந்து கிடைக்கும் கோமியம், சாணி, பால், தயிர் இவையெல்லாவற்றையும் கலந்து இந்த விநாயகரைச் செய்கிறேன்.

சாணியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்

இதனுடன் குங்கிலியம், கோரைக் கிழங்கு, மஞ்சள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்வேன். சாணியை மட்டுமே வைத்து ஒரு சிலையைச் செய்யும் போது அது காய்ந்தவுடன் பிரிந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் பஞ்சகாவியம் சேர்த்து சிலையைச் செய்கிறோம்.

பஞ்சகவ்வியத்தில் நெய், பால், தயிர் போன்றவற்றைக் கலக்கிறோம். குங்கிலியம், மஞ்சள் இரண்டுமே வாசனைக்காகவும், மஞ்சள் சாணியில் எந்த விதமான பாக்டீரியாக்களையும் அண்ட விடாது என்பதற்காகவுமே சேர்க்கிறேன்.  நாங்கள் செய்யும் சிலைகள் உள்ளங்கை அளவிற்கு மேல் ஒரு இரண்டு அடி இருக்கும்.  

சாணியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்
சாணியில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்

சிலைகளின் மேல்  தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்தச் சிலைகளைச் சரியாகப் பராமரித்தால் ஒரு ஆண்டுக்கு மேல் அப்படியே இருக்கும். நான் ஒரு வருடத்திற்கு முன் செய்த முதல் சிலை இப்போதும் அப்படியே இருக்கிறது. இந்தச் சிலைகள் இயற்கை முறையில் செய்வதால் நமக்கும் எந்தத் தீங்கும் வராது.

தற்போது சிலைகளை நாங்கள் ஆர்டர் கொடுத்தால் செய்து கொடுத்து வருகிறோம். ஒரு விநாயகர் சிலை 70 ரூபாய்க்கு விற்கிறோம். இதனுடன் சாம்பிராணி, விளக்கு எல்லாம் சேர்த்து மொத்தம் ரூ. 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

நெல்லை சுதந்திர தின விழா: மழையில் தேசியக் கொடி ஏற்றிய ஆட்சியர்; கண்கவர் கலை நிகழ்ச்சி | Photo Album

நெல்லை சுதந்திர தின விழா: கொட்டும் மழையில் தேசிய கொடி ஏற்றிய ஆட்சியர்.! கண்கவர் கலை நிகழ்ச்சிகள்.!79th Independence Day: "டபுள் தீபாவளி அறிவிப்பு டு ஆர்.எஸ்.எஸ் 100 வருட சேவை" - மோடி முழு உரை ஹைலைட்ஸ்... மேலும் பார்க்க

ஈரோடு: 'குட்டி கண்ணன்கள், குட்டி ராதாக்கள்' - மாநகராட்சி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி | Photo Album

கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ணன் ராதை வேடம் குழந்தைகள்கண்ண... மேலும் பார்க்க

'சின்னக் கண்ணன் அழைக்கிறான்' - ECR கோயிலில் கோகுலாஷ்டமி கொண்டாட பக்தர்களை அழைக்கிறது இஸ்கான்!

கிருஷ்ண பக்தர்கள் கொண்டாட்டத்தோடு வழிபடும் நாள் கோகுலாஷ்டமி. கண்ணன் சிறையில் தேவகிக்கும் வசுதேவருக்கும் மகனாக அவதரித்து அந்த இரவிலேயே கோகுலத்துக்கு மாற்றப்பட்ட நாள் அது என்பதால் மிகவும் உயர்வாகக் கருத... மேலும் பார்க்க

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயில் ஆடிப்பெருக்கு திருத்தேரோட்டம் | Photo Album

திருத்தேரோட்டம்திருத்தேரோட்டம்திருத்தேரோட்டம்திருத்தேரோட்டம்திருத்தேரோட்டம்திருத்தேரோட்டம்திருத்தேரோட்டம்திருத்தேரோட்டம்திருத்தேரோட்டம்திருத்தேரோட்டம்திருத்தேரோட்டம்திருத்தேரோட்டம்திருத்தேரோட்டம்திருத... மேலும் பார்க்க

விநாயகர் சதுர்த்தி: சென்னை கொசப்பேட்டையில் விற்பனைக்குத் தயாரான விநாயகர் சிலைகள் | Photo Album

இனிது இனிது இறை இனிது! இறையைத் தேடும் முயற்சியில் எளிய பயிற்சிகள்! விநாயகர் துதி!Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEkவணக்கம்,BIG BREAK... மேலும் பார்க்க

வரலட்சுமி விரதம்: தெரிந்துகொள்ள வேண்டிய 10 விஷயங்கள்!

ஆடி மாதம் அம்மன் மாதம். அந்த வகையில் ஆடிமாதத்தில் தென் மாநிலங்களில் பெரிதும் போற்றப்படும் வழிபாடு வரலட்சுமி பூஜை அல்லது வரமஹாலட்சுமி பூஜை. இந்த நோன்பைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்வில் செல்வம், ஆரோக்கி... மேலும் பார்க்க