தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!
பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து ஏன்? - அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சுதந்திர நாளையொட்டி சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் அமைச்சர் அன்பில் மகேஸ். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டுள்ளார்.
இதனிடையே செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 11 ஆம் வகுப்பு அடித்தளமாக இருக்க வேண்டுமே தவிர, அதுவே அவர்களுக்கு மன அழுத்தமாக மாறி விடக் கூடாது. அதனால்தான் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 3 ஆண்டுகள் மாணவர்கள் தேர்வு எழுதுவது மன அழுத்தத்தை உண்டாக்கும்.
எனினும் பிளஸ் 1 பாடங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால் அதைத் தவிர்க்க முடியாது. பிளஸ் 1 பாடங்கள் பள்ளிகளில் முழுமையாக நடத்தப்படும்.
பிளஸ் 1 பாடங்களை நன்றாகப் படித்தாலே போட்டித் தேர்வுகளில் எளிதில் வெற்றி பெறலாம்.
தமிழகத்தில் தற்போது 7 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக கல்வித் திட்டம் மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டின் தலைவர்கள், தமிழ்நாட்டின் முக்கியத்துவம் பற்றி பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக மாணவர்களின் கல்வி குறித்து ஆளுநர் பேசிய கருத்துகள் ஏற்புடையதல்ல" என்று பேசினார்.