வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் க...
இந்தியாவுக்கு வரும் ரொனால்டோ..! எஃப்சி கோவா உடன் மோதல்!
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்தியாவின் எஃப்சி கோவா அணிக்கு எதிராக விளையாட இந்தியா வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட இந்திய கால்பந்து கிளப்பான மோகன் பகான், எஃப்சி கோவா அணிகள் தேர்வாகியுள்ளன.
குரூப் சி பிரிவில் மோகன் பகானும் குரூப் டி பிரிவில் எஃப்சி கோவா அணியும் தேர்வாகி உள்ளன.
ரொனால்டோவின் அல்-நாஸர் கிளப் அணியும் குரூப் டி பிரிவில் இருக்கிறது.
ஆசிய கால்பந்து கழகம் (ஏஎஃப்சி) நடத்தும் இந்தத் தொடர் ஆசியாவிலேயே மிகவும் முக்கியமான போட்டியாக இருக்கிறது.
மோகன் பகான் ஐஎஸ்எல் தொடரில் ஷீல்டு கோப்பையை வென்றதால் நேரடியாக தேர்வாகியுள்ளது.
எப்ஃசி கோவா அணி சூப்பர் கோப்பையை வென்று பிளே-ஆஃப் சுற்றில் மோதி இடம் பிடித்துள்ளது.
16 அணிகள் மோதும் இந்தப் போட்டிகள் வரும் செப்.16ஆம் தேதி தொடங்குகிறது.
ஹோம். அவே என போட்டிகள் நடைபெறுவதால் ரொனால்டோ எஃப்சி கோவா உடன் மோத நிச்சயமாக இந்தியா வருவார் எனக் கணிக்கப்படுகிறது.
ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் 2 2025-26
குரூப் ஏ: அல் வாஸ்ல் எஃப்சி, எஸ்டெக்லால் எஃப்சி, அல் முஹரக் எஸ்சி, அல் வெஹ்தத்
குரூப் பி: அல் அஹ்லி எஸ்சி, பிஎஃப்சி ஆண்டிஜோன், எஃப்சி அர்கடாக், அல் கல்டியா எஸ்சி
குரூப் சி: மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட், செபஹான் எஸ்.சி., அல்-ஹுசைன் எஸ்சி, அஹல் எப்.சி.
குரூப் டி : எஃப்சி கோவா, அல்-நாஸர், அல்-ஜவ்ரா, எஃப்சி இஸ்டிக்லோல்
குரூப் இ : பெய்ஜிங் எஃப்சி, மகர்தூர் எஃப்சி, டாய் போ எப்சி, காங் அன் ஹா நொய் எப்சி
குரூப் எஃப் : பாங்காக் யுனைடெட், சிலாங்கூர் எஃப்சி, லயன் சிட்டி சைலர்ஸ் எப்சி, பெர்சிப் பாண்டுங்
குரூப் ஜி: காம்பா ஒசாகா, நாம் டின் எஃப்சி, ரட்சபுரி எஃப்சி, ஈஸ்டர்ன் எப்சி
குரூப் எச். : எஃப்சி போஹாங் ஸ்டீலர்ஸ், பிஜி பாத்தும் யுனைடெட், காயா எஃப்சி-இலோய்லோ, டாம்பைன்ஸ் ரோவர்ஸ் எஃப்சி
You manifested it, you got it!
— FC Goa (@FCGoaOfficial) August 15, 2025
We’ve been drawn into Group D of the AFC Champions League 2. Stay tuned for fixture details pic.twitter.com/0i2FV8Wz42